தமன்னா இடுப்பை பார்த்து.. காவாலாவை மிஞ்சும் நாஷா.. இதுவரை இல்லாத படு கவர்ச்சி நடனம்!

மும்பை: ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மூலம் சினிமா பார்வையாளர்களை கிறங்கடித்தவர் தமன்னா. இவர் நடிப்பதை காட்டிலும் தற்போது ஒரு பாட்டிற்கு நடனம் ஆடும் படங்களின் எண்ணிக்கை தான் அதிகரித்துள்ளது. இந்நிலையில், காவாலா பாடலை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி நடனத்தில் புயலை கிளப்பியுள்ளார் தமன்னா. தென்னிந்தியாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகரின் படத்தில் ஆடியிருக்கும் நடன காட்சிகள் இணையத்தை கலங்கடித்துவிட்டன.

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தமன்னா. அதைத்தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா , கார்த்தி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் பேரன்பை பெற்றிருக்கிரார். பிறந்து வளர்ந்தது மும்பை என்றாலும் தமிழில் பேச ஆசைப்பட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா தமிழிலும் பேசவும் பழகவும் கற்று தேர்ந்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அரண்மணை 4 நல்ல வரவேற்பை பெற்றது.

raid-2-movie-tamannaah-dance-to-song-announce

காவாலா பாடல் ஹிட்: ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் தமன்னா நடிகையாக வருவது போன்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இதில், காவாலா பாட்டிற்கு அவர் போட்ட நடனம் இளசு முதல் பெரியோர் வரை கவர்ந்து இழுத்தது. ஜெயிலர் படத்தின் ஹிட்டிற்கு இவரது கவர்ச்சி நடனமும் ஒரு காரணமாக இருந்தன. இவரது கவர்ச்சி நடனத்தை பார்த்து தென்னிந்திய சினிமா ரசிகர்களும் கிறங்கி போனார்கள். இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கி ஹிட் அடித்தது. இதேபோன்று தமன்னா கேஜிஎப் படத்திலும் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஸ்ட்ரீ 2 படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். தற்போது தமன்னா ஜெயிலர் 2 படத்திலும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் கதாப்பாத்திரம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

raid-2-movie-tamannaah-dance-to-song-announce

ஒடேலா 2 பட சர்ச்சை: விஜய் வர்மாவுடனான காதல் பிரேக் அப்பிற்கு பிறகு தமன்னா தன்னை பிஸியாக வைத்துக்கொண்டிருக்கிறார். அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் டிரைலர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ஒரு வசனமும் இந்தியா முழுக்க பெரும் சர்ச்சையாக மாறியது. மாடுகளை பலியிடுவதற்கு பதிலாக அதன் மூத்திரத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம் என்றும் மாடுகளை வதம் செய்வதை தவிர்க்கவும் என்பது போல் வசனத்தை பேசியிருப்பார். இந்த வசனம் பெரும் சர்ச்சையாக மாறியது. தமன்னாவை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதுதான் புதிய இந்தியாவா மேடம் என்றும் விமர்சித்தனர். ஓடேலா எந்த மாதிரி வசனம் புரியலை என்றும் கலாய்த்தனர்.

மீண்டும் கவர்ச்சி நடனம்: ரசிகர்கள் ஒரு பக்கம் அவரை கலாய்த்து வந்தாலும் மீண்டும் தனது கவர்ச்சி நடனத்தால் அனைவரது கவனத்தையும் திசை திருப்பியிருக்கிறார் தமன்னா. அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் ரெய்டு 2 படத்தில் நாசா என்ற ஐட்டம் பாடலுக்கு தமன்னா கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். இப்பாடலில் டீசர் வீடிேயா தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகை தமன்னா தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில், தெலுங்கில் பரபரப்பை ஏற்படுத்திய அதிதா சர்ப்ரைஸ் பாடலுக்கு போட்டியான ஒரு நடனத்தின் மூலம் தமன்னா கவர்ச்சி காட்டியுள்ளார். பாவாடையை இழுத்து இழுத்து ஆடுவதை போன்ற இடுப்பு டான்ஸால் கவர்ந்துள்ளார். இடுப்பை சுழற்றி சுழற்றி ஒல்லி பெல்லி டான்ஸ் ஆடியுள்ளார். இந்த நாஷா பாடலின் முழு வீடியோ நாளை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,ரெய்டு படம் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X