தைரியமா கட்டிப்பிடி... எக்ஸ் வீடியோஸ் நடிகரின் பயத்தை போக்கிய ராய்லட்சுமி!

கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட 'எக்ஸ் வீடியோஸ்' நடிகரின் பயத்தை நடிகை ராய்லட்சுமி போக்கியுள்ளார்.

Recommended Video

எக்ஸ் வீடியோஸ் நடிகருக்கு கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்த ராய்லட்சுமி!- வீடியோ

கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட 'எக்ஸ் வீடியோஸ்' நடிகரின் பயத்தை நடிகை ராய்லட்சுமி போக்கியுள்ளார்.

சென்னை: தன்னை கட்டிப்பிடிக்க தயங்கிய 'எக்ஸ் வீடியோஸ்' படத்தில் நடித்த அர்ஜுனின் பயத்தை நடிகை ராய்லட்சுமி போக்கியது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் வெளியான எக்ஸ் வீடியோஸ்' படத்தில் ரோஹன் என்கிற நெகடிவ் ரோலில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். 'புழல்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆர்யா, பாபி சிம்ஹா கூட்டணியில் உருவான 'பெங்களூரு நாட்கள்' படத்தில் ராய்லட்சுமியின் காதலராக நடித்தவர்.

மற்றவர்கள் எல்லாம் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தவர்கள்.. ஆனால் இவர் வந்தது இதுவரை யாருமே சொல்லியிராத முற்றிலும் வேறு ஒரு காரணத்துக்காக. அது என்னவென்றும் தான் சினிமாவில் நுழைந்தது குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அர்ஜுன்.

கூச்சம் அதிகம்

கூச்சம் அதிகம்

அவர் கூறியதாவது, "எனக்கு இயல்பிலேயே கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம். என்னுடைய நண்பர்கள் தான் கேமரா முன்னாடி நின்று நடிக்கும்போது கூச்சம் போய்விடும் என சொல்லி என்னை மாடலிங்கிற்குள் அனுப்பி வைத்தார்கள். அப்போதுதான் விஷ்ணு என்கிற நண்பர் மூலமாக டான்ஸ் மற்றும் நடிக்க தெரிந்த ஆள் வேண்டும் என்பதால் 'புழல்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சூர்யாவின் படப்பிடிப்பு

சூர்யாவின் படப்பிடிப்பு

அதன்பின் எம்.பி.ஏ முடித்துவிட்டு பயிற்சிக்காக அப்பல்லோ மருத்துவமனை ரிசப்ஷனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.. அந்த சமயத்தில அங்கே சூர்யாவின் படப்பிடிப்பு ஒன்று நடைபெற்றது. அதில் பணியாற்றிய ரம்யா மூலமாக எதிர்பாராமல் பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் 'பெங்களூரு நாட்கள்' பட வாய்ப்பு கிடைத்தது..

நடிக்க வாய்ப்பு

நடிக்க வாய்ப்பு

அந்தப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சஜோ சுந்தர் நட்பு கிடைக்க, அப்படியே அவர் இயக்கிய 'எக்ஸ் வீடியோஸ்' படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. பெங்களூர் நாட்கள் படத்தில் நடிக்கவேண்டும் என சொன்னபோது எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

ராய்லட்சுமி தந்த தைரியம்

ராய்லட்சுமி தந்த தைரியம்

நானோ நடிப்புக்கு புதியவன். அதிலும் ராய்லட்சுமியுடன் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இருந்தது. ஆனால் ராய்லட்சுமி தான் எனக்கு உற்சாகம் கொடுத்து கட்டிப்பிடிக்க வைத்தார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அதுமட்டுமல்ல இன்னுமொரு சோதனையாக பாபி சிம்ஹாவுடன் சண்டைபோடும் காட்சியில் நிறைய டேக் வாங்கி சொதப்பினேன். இப்போது 'எக்ஸ் வீடியோஸ்' படத்தை பார்த்துவிட்டு, புதிய ஆள் மாதிரி தெரியவில்லை. ரொம்பவும் இயல்பாக நடிக்கிறாய் என பலர் பாராட்டி வருவது மகிழ்சசியாக இருக்கிறது" " என்கிறார் அர்ஜுன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X