நான் இப்படி யாரையுமே டேட்டிங்குக்கு கூப்பிட்டதே இல்லை.. ரைசா பெருமூச்சு
Recommended Video
சென்னை: நான் இதுவரை இப்படி யாரையும் டேட்டிங்கிற்கு அழைத்தது இல்லை என்று கூறியுள்ளார் நடிகை ரைசா.
சமீபத்தில் ஹரீஸ் கல்யான் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .இந்த படத்தில் கூட ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் ரைசா மற்றும் ஹரீஸ் கல்யான் ரைசா பிக்பாஸ் சீசன் 1ல் ஒன்றாக பங்கேற்று இருந்தனர் .

இவர்கள் 'பியார் பிரேமா காதல்' படத்தில் இனைந்து கதாநாயகன் கதாநாயகியாக நடித்து இருந்தனர். தற்போது ரைசா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஹரீஸ் கல்யானை நான் டேட்டிங்கிற்கு அழைக்க போகிறன். இது தமிழ்நாடையே சந்தோஷபடுத்தும் என்று கூறினார் .மேலும் நான் இவ்வாறு இதற்கு முன் யாரிடமும் கேட்டதில்லை எப்படி கேட்பது என்றும் எனக்கு தெரியவில்லை என்று கூறியிருந்தார் .
ரைசா மற்றும் ஹரீஸ் கல்யானுக்கு இடையே தற்போது காதல் மலர்கிறதா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. இவர்கள் இருவரும் பிக்பாஸிலும் சரி படத்திலும் சரி வெளியிலும் சரி ரசிகர்களால் ரசிக்க பட்ட ஜோடிகள் ,இவர்கள் காதல் செய்வது பலரையும் சந்தோஷத்திலே ஆழ்த்தும். இவர்களுக்குள் காதல் மலர்வது ஆச்சரியபடும் விசயமும் இல்லை.
ஏனெனில் ஹரீஸ் கல்யான் பிக்பாஸ் வீட்டிற்குள் தாமதமாக தான் வந்தார்.அதற்கு முன்பே ஆரம்பத்தில் இருந்தே ரைசா வீட்டில் இருந்தார். ரைசா வீட்டினுள் இருக்கும் போது ஆரவ் ஓவியா காதல் கதை சென்றுகொண்டிருந்தது.
அப்போது மிகுந்த ஏக்கத்துடன் ரைசா எனக்கும் ஒரு காதலன் அல்லது நண்பன் கிடைக்காமாட்டனா என்று தனது நண்பர்களுடன் உரையாடி கொண்டார். அதே போல் ஹரீஸ் கல்யானும் வீட்டிற்குள் வந்து ரைசாவின் சிறந்த நண்பரானார் .
ரைசா மற்றும் ஹரீஸ் கல்யான் படத்திலும் நல்ல ஜோடியாகினார்கள். தற்போது ரைசா இப்படி ஹரீஸிடம் டேடிங் கேட்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை .அவர்கள் காதலர்களாக மாறினால் திரையிலும் வாழ்விலும் இனைந்து பணியாற்றிய பல ஜோடிகள் வரிசையில் இவர்களும் இனைவார்கள் என்று இனைய ரசிகர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











