இத்தனை வருசத்துக்கு அப்புறம் நயனுக்கு கிடைச்சது, 2வது படத்திலேயே ரைசாவுக்கு கிடைச்சிருச்சே!
சென்னை : கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள ஆலிஸ் என்ற படத்தில் நடிக்கிறார் நடிகை ரைசா.
தமிழ் சினிமாவில் வெறும் அழகு பொம்மைகளாக மட்டும் வந்து செல்லாமல், தனி நாயகிகளாக தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

தற்போது அந்த வகையில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிகம் நடித்து வருபவர்கள் நயன்தாராவும், அனுஷ்காவும் தான். திரிஷாவும் அது போன்ற படங்களில் நடிக்க முயற்சிக்க, ஆனால் அப்படம் தோல்வியடைந்தது வேறு கதை.
அனைத்து நடிகைகளுக்குமே அதுபோன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எப்போதுமே லட்சியமாக இருக்கும். ஆனால் எல்லாருக்கும் அது வசப்பட்டு விடுவதில்லை.
இந்நிலையில், நாயகியாக தனது இரண்டாவது படத்திலேயே ரைசாவுக்கு அப்படி ஒரு யோகம் அடித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணி சந்துரு இயக்குகிறார். இவர் பியார் பிரேமா காதல் படத்தில் இணை இயக்குநராக பணி புரிந்தவர். இப்படத்திற்கு ஆலிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மாடலிங் செய்து வந்த ரைசா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். பிக் பாஸில் அவரது சக போட்டியாளரான ஹரிஷுடன், அவர் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் வெற்றி பெற்றது. இப்படத்தையும் யுவன் சங்கர் ராஜாதான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலீஸ் படத்தின் போஸ்டரே வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படம் திகில் கதையாக இருக்கலாம் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











