ஓவியாவை விட ரைசாதான் ஒஸ்தி.. இதில்!

சென்னை: சினிமாவிற்குள் வாய்ப்புகளை பெறுவதும், வாய்ப்புகள் கிடைத்தாலும் நமக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதும் சிரமமான விஷயம். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி அதில் பங்கு பெற்ற அனைவருக்கும் தனியொரு அடையாளத்தை தந்தது. அதற்கு முன்னர் அவர்களுக்கு பல்வேறு அடையாளங்கள் இருந்தாலும், அதில் பங்கேற்ற பிறகு பிக் பாஸ் அவர்களது அடையாளமாகவே மாறி போனது.

பிக்பாஸின் 2 சீசனிலும் அதிக அளவு புகழ் பெற்றது சந்தேகமே இல்லாமல் ஓவியாதான். தனது இயல்பான நடவடிக்கைகளால் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றார். நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினாலும் அவரது ஆர்மி குறையவில்லை.

Raiza Wilson reaps big from Big Boss

அதிலிருந்து வெளியேறிய பிறகு அவரை சினிமாவில் பார்க்கலாம் என்று எதிர் பாத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. காத்திருந்து 2 ஆண்டுகள் கழித்து ஒரு படம் வெளியாக போகிறது என்றபோது அவரது ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

ஆனால் 90 எம்.எல் ட்ரெய்லர் வெளியானபோது பாதி பேருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ட்ரெய்லரை வைத்து எந்த முடிவுக்கும் வராதீர்கள் என ஓவியா கூறியபோது அவரது ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். ஆனால் படம் வெளியான பிறகும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Raiza Wilson reaps big from Big Boss

அதே சீசனில் பிக் பாஸில் இடம் பெற்றிருந்தவர் தான் ரைசா வில்சன். இவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டாலும், அடுத்தடுத்து இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் வந்தன. விஐபி 2 வில் கஜோலின் உதவியாளராக சிறிய வேடத்தில் நடித்தவர், பியார் பிரேமா காதலில் நாயகியாக பிரமோஷன் பெற்றார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பாலாவின் வர்மா படத்தில் ஒப்பந்தமானார். தற்போது ஜிவி பிரகாஷ் ஜோடியாக காதலிக்க யாருமிலை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


பிக்பாஸ் வீட்டிற்குள் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் அங்கு கிடைத்த புகழை சரியாக பயன்படுத்தியது ரைசாதானோ என யோசிக்க தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X