பாலாவின் 'வர்மா'வுல உங்க நடிப்பு வேற லெவல்.. ரைசா வில்சனை அப்படி புகழும் நெட்டிசன்ஸ்!

By

சென்னை: நடிகை ரைசா வில்சன் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.

இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு புகைப்படங்களை பதிவிடும் நடிகைகளில் ஒருவர் ரைசா வில்சன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர்.

பாலாவின் வர்மா

பாலாவின் வர்மா

யுவன் சங்கர் ராஜா தயாரித்த பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்தார் ரைசா. இளன் இயக்கிய இந்த படத்தில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. இதையடுத்து பாலா இயக்கத்தில் துருவ் நடித்த வர்மா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

ஓடிடி தளத்தில்

ஓடிடி தளத்தில்

அந்த படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில், வெளிநாடுகளில் பார்க்கும் வகையில் ரிலீஸ் ஆனது. அடுத்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்திருந்தார். இப்போது, ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் காமெடி ஹாரார் படமான, காதலிக்க யாருமில்லை, விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர், கார்த்திக் ராஜு இயக்கும் தி சேஸ் படங்களில் நடித்து வருகிறார்.

மரத்தில் தொங்கி

மரத்தில் தொங்கி

தி சேஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் தலைகீழாக மரத்தில் தொங்கியபடி இருந்தார். இந்த போஸ்டர் மிரட்டியது. இந்தப் படத்தில் பறவையியல் ஆய்வாளராக நடிக்கிறார், ரைசா. அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிடும் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.

சரமாரி கமென்ட்

சரமாரி கமென்ட்

அதில், செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார் ரைசா வில்சன். இதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் கிடைத்துள்ளன. நெட்டிசன்ஸ் சரமாரி கமென்ட்களை தெளித்துள்ளனர். ஸ்டைலிஷ் மாடர்ன் லுக் ரைசா, அழகு அள்ளுது என சிலர் தெரிவித்துள்ளனர். பலர் அவரை வர்ணித்துள்ளனர்.

மினுங்க ஆரம்பிச்சுட்டீங்க

மினுங்க ஆரம்பிச்சுட்டீங்க

சில நெட்டிசன்ஸ், இன்னும் நிறைய போட்டோஸ் எதிர்பார்க்கிறோம் என்றும் நல்லா மினுங்க ஆரம்பிச்சுட்டீங்க என்றும் கூறியுள்ளனர். வர்மா படத்துல உங்க ஆக்டிங் சூப்பர், வேற லெவலாக இருந்தது என்று சில நெட்டிசன்ஸ் பாராட்டி உள்ளனர். இந்த போட்டோவுல இருக்கிறது நீங்க மாதிரியே தெரியலை என்று சிலர் கூறியுள்ளனர். இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X