கதைகேற்ப ‘பிகினி‘யில் கூட நடிப்பேன்.. நடிகை ரைசா வில்சன் பேட்டி!
சென்னை: வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் அசிஸ்டண்ட்டாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரைசா வில்சன். அதன் பின் பிக் பாஸ் முதல் சீசனில் களமிறங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரைசா வில்சன். நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி கவனம் பெற்றுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரைசா வில்சன், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சினிமா பயணம் மற்றும் தனிப்பட்ட எண்ணங்களை திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார்.
நடிகை ரைசா வில்சன்: அதில், மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த ஆரம்பகட்டத்தில் பயமும், பதட்டமும் இருந்தது. ஆனால், அவை காலப்போக்கில் அந்த பயத்தை கடந்து இன்று திரைப்படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறேன். தன்னைச் சுற்றி வரும் காதல் வதந்திகள் குறித்து பேசிய ரைசா, "இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. உண்மையான காதலை தேடி கொண்டிருக்கிறேன். என் மனதை புரிந்து கொள்ளக்கூடிய ஒருவரை சந்தித்தால் நிச்சயம் காதலிப்பேன்" என்றார்.

கவர்ச்சியாக நடிப்பேன்: தொடர்ந்து பேசிய நடிகை ரைசா வில்சன், நடிகைகள் கவர்ச்சியான ஆடைகள் அணிவதை விமர்சிப்பது சரியல்ல, ரசிகர்களை மகிழ்விப்பதற்கும் கதைக்கு தேவையாக இருந்தால் மட்டுமே கவர்ச்சியான ஆடை அணிப்படுகிறது என்றார். அதேபோல், 'பிகினி' குறித்து பேசிய ரைசா வில்சன், நான் மாடலிங் பின்னணியில் இருந்து வந்ததால் பிகினி தவறான உடையாக எனக்கு தெரியவில்லை. கதைக்கு தேவையானால் அந்த வகை ஆடையிலும் நான் நடிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
பிகினி தவறான ஆடை இல்லை: மாடல் அழகியான ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சி பின், பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, எப்.ஐ.ஆர், பொய்க்கால் குதிரை, காபி வித் லவ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் ஆர்யா நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வரும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் முக்கியமான ரோலில் ரைசா நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications