'உங்க அருமை தெரியாம 'வர்மா' போயிடுச்சே..' ஜில் வைரலில் ராக்கிங் ரைசாவின் வேற லெவல் போட்டோஸ்!

By

சென்னை: நடிகை ரைசா வில்சன் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படம், வேகமாக பரவி வருகிறது.

இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு புகைப்படங்களை பதிவிடும் நடிகைகளில் ஒருவர் ரைசா வில்சன்.

பிக் பாஸ் கண்டுபிடித்து கொடுத்த பல அழகு செல்லங்களில் இவரும் ஒருவர்.

பாலாவின் வர்மா

பாலாவின் வர்மா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன், சில படங்களில் சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தார். பிறகு, பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்தார். இளன் இயக்கிய இந்த படத்தில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. பாலா இயக்கத்தில் துருவ் நடித்த வர்மா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

 காமெடி ஹாரர்

காமெடி ஹாரர்

அந்த படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில், வெளிநாடுகளில் பார்க்கும் வகையில் ரிலீஸ் ஆனது. அடுத்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்திருந்தார். இப்போது, ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் காமெடி ஹாரார் படமான, காதலிக்க யாருமில்லை, விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர், கார்த்திக் ராஜு இயக்கும் தி சேஸ் படங்களில் நடித்து வருகிறார்.

மிரட்டியது போஸ்டர்

மிரட்டியது போஸ்டர்

தி சேஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தலைகீழாக மரத்தில் தொங்குவதுபோல அந்த போஸ்டர் மிரட்டியது. ரைசா, இதில் பறவையியல் ஆய்வாளராக நடிக்கிறார். இந்நிலையில் அவர் தனது அப்பா மற்றும் சகோதரியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை சில நாட்களுக்கு முன் பதிவிட்டுள்ளார்.

காலம் மாற்றியது

காலம் மாற்றியது

அதில் தன்னை கார்பரேட் அதிகாரியாகவும் சகோதரியை நடிகையாக்க இருப்பதாகவும் பெற்றோர் கூறியிருந்தாகவும் ஆனால், காலம் மாற்றிவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இப்போது மேலும் சில போட்டோஷூட் ஸ்டில்களை பதிவிட்டுள்ளார், ரைசா.

அருமை தெரியாம

அருமை தெரியாம

ஒரு போட்டோவில் சிவப்பு நிற உடையிலும் மற்றொரு புகைப்படத்தில் ஸ்விம் டிரெஸிலும் இருக்கிறார். அதற்கு கருத்துக்களை பதிவிட்டுள்ள ரசிகர்கள், 'உங்க அருமை தெரியாம 'வர்மா' போயிடுச்சு என்று வருத்தமாகக் கூறியுள்ளனர். இன்னும் சிலர், உங்களுக்கு எல்லா திறமையும் இருக்கு, கண்டிப்பா நல்ல நடிகையா வருவீங்க என்று கூறியுள்ளார்.

வேற லெவல்ல

வேற லெவல்ல

சில நெட்டிசன்ஸ், பியார் பிரேமா காதல் படம் மூலம் தமிழுக்கு அருமையான ஹீரோயினை கொடுத்த தயாரிப்பாளர் யுவனுக்கு நன்றி கூறியுள்ளனர். பலர் அவரை மானே தேனே என வர்ணித்துள்ளனர். வேற லெவல்ல இருக்கீங்க என்றும் உங்க போட்டோவும் வேற லெவல்ல இருக்கு என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X