கோவா ரெசார்ட்டில் மசாஜ்.. ரைசா வில்சன் போட்ட போட்டோவை பார்த்தீங்களா.. ஒரே ஜாலி வைப் தான்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 1 மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன், ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எஃப்ஐஆர், பொய்க்கால் குதிரை, காபி வித் காதல் மற்றும் கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கடந்த 2023ம் ஆண்டுக்குப் பிறகு ஜி.வி. பிரகாஷின் காதலிக்க நேரமில்லை படத்தில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், அந்த படம் என்ன ஆனது என்பது குறித்த எந்தவொரு அப்டேட்டும் அதன் பின்னர் வெளியாகவில்லை.

Raiza Wilson shares massage at GOA resort photos during her summer vacation

தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் காணாமல் போய் வரும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு பட வாய்ப்புகளும் இல்லாமல் தவித்து வரும் ரைசா வில்சன் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாகவே மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

சம்மர் ஜாலி டூர்: ஒரு சில படங்களில் நடித்தாலே கோடிகளில் ஹீரோயின்கள் சம்பளம் வாங்கி விடுகின்றனர். வளர்ந்து வரும் இளம் ஹீரோயினாக இருந்த ரைசா வில்சன் தொடர்ந்து பெரியளவில் சாதனைகளை சினிமாவில் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியவில்லை. ஆனாலும், ஃபேஷன் துறையில் தொடர்ந்து மாடலிங் செய்து வருகிறார். இந்த சம்மர் விடுமுறையை கோவாவில் டூர் செய்து கழித்து வரும் ரைசா வில்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட குளிர்ச்சியூட்டும் போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளார்.

மசாஜ் போட்டோ: ஆடை அணியாமல் வெறும் டவலை மட்டும் போர்த்திக் கொண்டு கோவாவில் உள்ள ரெசார்ட் ஒன்றில் மசாஜ் செய்யும் போது எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களின் லைக்குகளை அள்ளியுள்ளார் ரைசா வில்சன். நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வந்த ரைசா வில்சன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

நீச்சல் குள புகைப்படங்கள்: ஆரஞ்சு நிற உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு வந்த ரைசா வில்சன் ஹைட்ரேட்டட்டாக இருக்க வேண்டும் என சற்றுமுன் நீச்சல் குளத்தில் பிகினி உடையை அணிந்துக் கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X