புயல் வேகத்தில் நடந்து முடிந்த "தி சேஸ்".. சூப்பரான அப்டேட்டை பகிர்ந்த ரைசா!

சென்னை : நயன்தாரா, திரிஷா, ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி நடிகைகளை தொடர்ந்து இப்போது இளம் நடிகை ரைசா வில்சன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பல கோடி ரசிகர்களை வென்றார்.

இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கிவரும் "தி சேஸ்" திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவாரண்டைனிலும் சத்தமில்லாமல் நடு காட்டில் நடைபெற்ற நிலையில் இப்பொழுது அதன் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் முடிந்துவிட்டது என அப்படக்குழு மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகிறது.

மாடல் அழகியாக

மாடல் அழகியாக

இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரைசா வில்சன் தமிழில் சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப் பெரிய அறிமுகத்தை கொடுத்ததையடுத்து, மாடல் அழகியாக வலம் வந்த இவர் இப்பொழுது கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அழகான ஜோடி

அழகான ஜோடி

வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்த ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எக்கசக்கமான ரசிகர்கள் உருவாக பிக் பாஸில் ஹரிஷ் கல்யாண் உடன் ரொமான்ஸ் செய்ததை அடுத்து பியார் பிரேமா காதல் திரைப்படத்திலும் ரீல் ஜோடியாக அறிமுகமாகி காதலர்களை வெகுவாக கவர்ந்ததோடு திரையில் பார்ப்பதற்கு மிக அழகான ஜோடி என்ற பாராட்டுகளையும் பெற்றனர்.

நடிகைகளின் பார்முலாவில்

நடிகைகளின் பார்முலாவில்

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்த "தனுசு ராசி நேயர்களே" திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்ற இவர் இப்பொழுது முன்னணி நடிகைகளின் பார்முலாவில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் வெறித்தனமாக நடித்து வருகிறார்.

தலைகீழ் தொங்கியவாறு

தலைகீழ் தொங்கியவாறு

அடர்ந்த காட்டுக்குள் ரத்தம் சொட்டச் சொட்ட ரைசா தலைகீழ் தொங்கியவாறு "தி சேஸ்" போஸ்டர் வெளியாகி அனைவரையும் மிரட்ட இதன் படப்பிடிப்புகள் யாருக்கும் தெரியாமல் முற்றிலும் நடுக்காட்டில் குறைந்த நாட்களில் நடத்தி முடித்தது இந்த படக்குழு.

சூப்பரான அப்டேட்டை

சூப்பரான அப்டேட்டை

ராக்கெட் வேகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து, டப்பிங் மிக்சிங் என அனைத்து கட்டப் பணிகளும் வெகு சிறப்பாக முடிவடைந்துள்ளது, இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ரைசா இப்பொழுது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் இந்த சூப்பரான அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

முழுக்க முழுக்க த்ரில்லர்

முழுக்க முழுக்க த்ரில்லர்

"தி சேஸ்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அவ்வப்போது வெளியாகும் படப்பிடிப்பு புகைப்படங்கள் பார்க்கும் அனைவரையும் மிரட்டி வந்த நிலையில் முழுக்க முழுக்க த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் "தி சேஸ்" பார்க்கும் அனைவரையும் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வர, ரைசாவின் வழக்கமான க்யூட் கலந்த கவர்ச்சி இந்தப்படத்திலும் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X