Raiza Wilson: தண்ணியில் மிதக்கும் தங்கம்.. பிகினி உடையில் சம்மர் சூட்டை ரைஸ் பண்ணும் ரைசா வில்சன்!
சென்னை: பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் அதிலிருந்து வெளியேறிய நிலையில், ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஹீரோயினாக மாஸ் காட்டினார்.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ரைசா வில்சன் கடந்த ஆண்டு இறுதியில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் படத்தில் விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்து வியக்க வைத்தார்.
இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை அடுக்கி உள்ளார்.

சம்மர் சூட்டை ரைஸ் பண்ணும் ரைசா: ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்தே வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஏப்ரல் மாதம் இறுதியை எட்டியுள்ள நிலையில், சூரியன் வீட்டுக்கு வெளியே வந்து நிற்பதை போல உஷ்ணமாக இருப்பதாக மக்கள் ஃபீல் செய்து வரும் நிலையில், மேலும், சம்மர் சூட்டை தனது படு கவர்ச்சியான போட்டோக்கள் மூலம் அதிகரித்துள்ளார் ரைசா வில்சன் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

தண்ணியில் மிதக்கும் தங்கம்: பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, வர்மா, எஃப்ஐஆர், பொய்க்கால் குதிர, காபி வித் காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரைசா வில்சன் கருங்காப்பியம், ஹாஷ்டேக் லவ், காதலிக்க யாருமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளத்தில் கருப்பு நிற பிகினி உடையில் குளித்தபடி எடுத்த ஹாட் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார் ரைசா வில்சன்.

அதீத கவர்ச்சி: முன்னதாக வெள்ளை நிற கவர்ச்சி உடையில் கச்சிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து இருந்தார் ரைசா வில்சன். சோஷியல் மீடியாவில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், தொடர்ந்து கவர்ச்சி ட்ரீட் கொடுத்து வருகிறார்.
அறுவை சிகிச்சை மூலம் அழகாக நினைத்த ரைசா வில்சன் அகோரமான நிலையில், மீண்டும் குணமடைந்தாலும் முன்பிருந்த க்யூட்னஸ் எல்லாம் சென்று விட்டதாக ரசிகர்கள் இன்னமும் ஃபீல் செய்து வருகின்றனர். அதற்கு மேட்ச் பண்ண ஹாட்னஸை அள்ளித்தெளித்து வருகிறார் ரைசா வில்சன்.


Click it and Unblock the Notifications











