பார்.. மேக்கப் போடாமல்.. முதல் முறையாக.. ரியல் முகத்தை காட்டியிருக்கும் பிக்பாஸ் ரைசாவை பார்!

சென்னை: குளித்து முடித்து விட்டு அப்படியே மேக்கப் இன்றி எடுத்த போட்டோக்களை நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss Abhirami glamour photo shoot | Abhirami Venkatachalam

வேலையில்லா பட்டதாரி படத்தில் கஜோலின் பி-ஏ.,வாக சின்ன ரோலில் நடித்திருப்பார் நடிகை ரைசா வில்சன்.

மாடல் துறையில் கலக்கி வந்த அவருக்கு பிக்பாஸ் முதல் சீசன் மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை கொடுத்தது.

மேக்கப் இல்லாமல்

மேக்கப் இல்லாமல்

ப்ப்பா.. ரைசாவா இது? என கேட்கும் அளவுக்கு மேக்கப் இல்லாமல், அவ்வளவு மோசமாக ரைசா இல்லை. நேச்சுரல் பியூட்டி என்று சொல்லும் அளவுக்கு நன்றாகவே இருக்கிறார். ஆனால், இது ரைசாவா? என்பதில் மட்டும் சிலருக்கு சந்தேகம் எழும்படி அந்த புகைப்படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க நம்பலனாலும் அதுதான் நெசம்

நீங்க நம்பலனாலும் அதுதான் நெசம்

அசுரன் படத்தை வைத்து வரும் டெம்பிளேட் மீமான "நீங்க நம்பலனாலும் அதுதான் நெசம்" என மீம் அப்படியே இந்த பியார் பிரேமா காதல் நாயகியின் புகைப்படத்திற்கு கச்சிதமாக பொருந்தும். தனது புகைப்படத்தை பதிவிட்டு, உண்மையாவே இது நான் தாங்க என ரைசா வில்சன் கேப்ஷன் வேற கொடுத்துள்ளது கூடுதல் சுவாரஸ்யம்.

தங்கச்சியா

தங்கச்சியா

முழு மேக்கப்புடன் மைதா மாவு போல வெள்ளையாக இருக்கும் ரைசா வில்சனா இது என பல ரசிகர்கள் கமெண்ட் செய்து ஆச்சர்யப்பட, சில ரசிகர்களோ, அய்யே பொய் எல்லாம் சொல்லாதீங்க, அது உங்க கூட பொறந்த தங்கச்சித் தானே? எப்போ சினிமாவில் நடிக்கப் போறாங்க என பயங்கரமாக கலாய்த்தும் வருகின்றனர்.

ஷ்ரத்தா கபூரா

ஷ்ரத்தா கபூரா

இந்த புகைப்படத்தில் தான் உண்மையிலேயே அழகா இருக்கீங்க என்றும், குளிச்சு முடிச்சுட்டு அப்படியே நடத்திய போட்டோஷூட்டா என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வர, ஒரு ரசிகர், தான் முதலில் இது பாலிவுட் ஹீரோயின் ஷ்ரத்தா கபூர் என நினைத்து விட்டதாக 5 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 500 ரூபாய்க்கு நடித்து விட்டு போயிருக்கிறார்.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து

அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்கான வர்மா படத்தில் நடிகை கதாபாத்திரத்தில் ரைசா நடித்திருந்தார். ஆனால், அந்த வெர்ஷன் வெளியாகவில்லை. தற்போது விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்., ஹாரர் படமான ஆலிஸ், காதலிக்க யாருமில்லை மற்றும் ஹாஷ்டேக் உள்ளிட்ட பல படங்கள் ரைசா வில்சனின் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X