சமந்தா மாமனார், மாமியார் இவங்கதான்.. நாத்தனார் என்ன சொல்றாங்க பாருங்க.. செம க்யூட்
சென்னை: நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் சமீபத்தில்தான் கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் வைத்து இரண்டாவது திருமணம் நடந்தது. இதில் இரண்டு பேரின் உறவினர்களும், நெருக்கமான நண்பர்களும் கலந்துகொண்டார்கள். புதுமண தம்பதிக்கு ஒட்டுமொத்த திரைத்துறையினரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்தார்கள். இந்நிலையில் ராஜ் நிடிமோருவின் தங்கையின் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார் சாம். ஆனால் அது நாக சைதன்யா தரப்புக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும் இதனால் வந்த பிரச்னையின் காரணமாக சைதன்யாவும், சமந்தாவும் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றும் பிரிந்துவிட்டார்கள்.
இரண்டாவது திருமணம்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா சில காலம் சிங்கிளாக இருந்துவிட்டு நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த வருடத்தில் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. இது ஒருபக்கம் இருக்க சமந்தா சிங்கிளாகவே தன்னை காட்டிக்கொண்டார். ஆனால் அவர் சிங்கிள் இல்லை; ஃபேமிலி மேன் இயக்குநர் ராஜுடன் காதலில் இருக்கிறார் என்று கிசுகிசுக்கள் பரவின. அதுகுறித்து இரண்டு பேருமே எந்த ரியாக்ட்டும் செய்துகொள்ளவில்லை.

கோவையில் திருமணம்: சூழல் இப்படி இருக்க யாருமே எதிர்பார்க்காத வகையில் சமீபத்தில் கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் வைத்து இரண்டு பேரும் சத்தம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார்கள். இத்திருமணத்தில் சமந்தாவுக்கும் ராஜுவுக்கும் நெருக்கமான உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். இரண்டு பேரும் திடீரென திருமணம் செய்துகொண்டது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸை கொடுத்தது.
குவியும் வாழ்த்து: ராஜ் நிடிமோருவுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. அவர் ஷ்யாமிலி என்பவரை திருமணம் செய்திருந்தார். சில காரணங்களால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். விவாகரத்து ஆன ராஜ் மற்றும் சமந்தா இணைந்து தொடங்கியிருக்கும் புதிய வாழ்க்கை அவர்களுக்கு அனைத்து வகையான மகிழ்ச்சியையும் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் தங்களது வாழ்த்து மழையை தூவினர்.
ராஜ் தங்கை பதிவு: இந்நிலையில் ராஜ் நிடிமோருவின் தங்கையான ஷீதல் நிடிமோரு போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது திருமணம் அன்று சமந்தா மற்றும் ராஜ் குடும்பத்தினர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத்தான் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்துக்கு கேப்ஷனாக, 'பகிர்ந்துகொள்ளும் காதல் பெருகும். இணக்கம்தான் உண்மையான ஆசீர்வாதம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இரண்டு இதயங்கள் ஒரே பாதையை தேர்ந்தெடுக்கையில் வரும் நிலைத்தன்மையுடன் முன்னோக்கி செல்வது குறித்து குடும்பமாக எங்களுக்கு பெருமை' எனவும் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











