Sakshi Agarwal: கோலிவுட்டை திணறவைக்கும் கவர்ச்சி.. சாக்ஷி அகர்வாலின் ஹாட் பிக்ஸ்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் சாக்ஷி அகர்வால், சோஷியல் மீடியாவில் விதவிதமான ரீல்ஸ், கவர்ச்சி போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். எந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் போட்டோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
ரசிகர்களின் பேராதரவை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில், ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த லிஸ்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சயமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.

வட மாநிலத்தைச் சேர்ந்த சாக்ஷி அகர்வால், சிறுவயது முதலே மாடலிங் துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார். பல தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து சினிமா வாய்ப்பை தேடி அலைந்த சாக்ஷிக்கு அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கைவசம் உள்ள படம்: ராஜா ராணி படத்தை தொடர்ந்து, காலா படத்தில் ரஜினியின் மருமகளாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுக்கு தோழியாகவும் நடித்திருந்தார். அதன் பின் டெடி, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் Guest : Chapter 2, தீ நைட், புரவி, 120 Hours, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

கோலிவுட்டை திணறவைக்கும் கவர்ச்சி: இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் கவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தங்க நிறத்தில் உடையில், முன்னழகு அழகாக தெரியும்படி, கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் போட்டோவிற்கு லைக்குகளை குவிந்து வருகின்றனர்.
ஏமாற்றிவிட்டார்கள் சாக்ஷி வேதனை: நேற்று முன்தினம் இவர், சினிமாவிற்கு வந்த புதிதில், கிடைத்த ஏமாற்றங்கள் குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதில், நான் பெங்களூரில் இருந்த சமயத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்றார்கள். நான் இரண்டு நாட்கள் நடித்தேன். பின்னர் அழைப்பதாக கூறினார்கள். ஆனால், அதன் பிறகு அவர்கள் என்னை அழைக்கவில்லை. அந்த நேரத்தில் எனக்கு தயாரிப்பு பற்றி எல்லாம் பெரிய அளவில் தெரியாது என்று சாக்ஷி தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.


Click it and Unblock the Notifications











