50 நாளில் 16 கிலோ எடை குறைப்பு.. ஆல்யா மானசா ரசிகர்களுக்கு சொன்ன செம டிப்ஸ்!

சென்னை: சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக விளங்கும் ஆலியா மானசா மொத்த எடையை குறைத்து சும்மா சிக்குனு மாறி உள்ளார்.

நடிகை ஆலியா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Raja rani Serial actor Alya manasa 50 days weight loss challenge

அந்த தொடரில் இவரின் கதாபாத்திரம் இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தது.

நடிகை ஆல்யா மானசா: ராஜா ராணி தொடரில் தன்னுடன் இணைந்த நடித்த சஞ்சீவை காதலித்து வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு இருவரும் திருமணம் கொண்டனர். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பிற்கு பிறகு சில மாதங்களிலேயே ஆலியா, ராஜா ராணி 2 தொடரில் லீட் ரோலில் நடித்து வந்தார்.

Raja rani Serial actor Alya manasa 50 days weight loss challenge

சீரியலில் படுபிஸி: ராஜா ராணி தொடரில் நடித்து வந்த போதே, இரண்டாவதாக ஆலியா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதே அந்த தொடரில் நடித்து வந்தார். இதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார்.

50 நாளில் 16 கிலோ எடை குறைப்பு: இரண்டாவது குழந்தை பிறகு கொழு கொழுவென்று இருந்த ஆலியா மானசா 50 நாளில் 16 கிலோ வரை எடையை குறைத்து இருக்கிறார். அனைவரும் உடல் எடையை இழப்பதற்காக என்னென்ன முயற்சிகளை மேற்கொள்வார்களோ, அதையே ஆலியாவும் மேற்கொண்டுள்ளார். ஆனால், தன்னால் உடல் எடையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் அவர் இந்த முயற்சியில் இறங்கியதால் அவரால் சீக்கிரமாகவே உடல் எடையை குறைக்க முடிந்ததாக கூறியுள்ளார்.

Raja rani Serial actor Alya manasa 50 days weight loss challenge

ரசிகர்களுக்கு டிப்ஸ் : மேலும் ரன்னிங் , வாங்கிக் செல்வது, கடுமையான உடற்பயிற்சி செய்வது, தினமும் காலையில் எழுந்தவுடன் சீரகத்தண்ணீர் மற்றும் தேன் கலத்த சுடுதண்ணீர் குடிப்பதால் பெருமளவு உடல் எடையை குறைக்க முடியும் என்று ஆலியா மனசா தனது ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X