»   »  அனுஷ்கா எடையால் மூட் அவுட் ஆன ராஜமவுலி.. தள்ளிப் போகுது பாகுபலி 2!

அனுஷ்கா எடையால் மூட் அவுட் ஆன ராஜமவுலி.. தள்ளிப் போகுது பாகுபலி 2!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலக அளவில் இதுவரை எந்த இந்திய படமுமே பிடிக்காத இடத்தை பிடித்துள்ளது பாகுபலி 2. பிரம்மாண்டத்தின் உச்சகட்டமாக இன்னும் பல ஆண்டுகளுக்கு விளங்கவிருக்கிறது. இப்படி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு சீரியஸாக இருக்க வேண்டும்? ஆனால் அனுஷ்கா எடுத்த ஒரு லைஃப் ரிஸ்கால் பாகுபலி 2 ஷூட்டிங்கையே தள்ளி வைத்துவிட்டு மன வருத்தத்தில் இருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

எல்லாம் இந்த இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றியதுதான். பாகுபலியில் ஒல்லி அனுஷ்காவாக நடித்திருந்த அனுஷ்கா இடையில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்துக்காக இருமடங்கு தன் எடையை ஏற்றினார். குறைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் ஏற்றினார்.

Rajamouli upset with Anushka's appearance

ஆனால் இப்போது குறைக்க முடியாமல் அவதிப்படுகிறார். ஓரளவுக்குமேல் எடை குறையாமல் பூசியபடியே தோற்றமளிக்கிறார். பாகுபலி 2 வில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை அப்படியே வைத்து எடுத்துவிட்ட ராஜமௌலி முக்கியமான க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுக்க முடியாமல் டென்ஷன் ஆகிவிட்டார். அனுஷ்காவின் பூசிய தோற்றம் ஃப்ரேமில் நன்கு தெரிவதால் ஷூட்டிங்கையே பேக் அப் செய்துவிட்டு உடல் எடையை குறைத்துவிட்டு வா என்று அனுப்பிவிட்டாராம்.

அனுஷ்காவின் முட்டாள்தனத்தால் பாகுபலி 2 ரிலீஸே தள்ளிப்போகும் போல!

English summary
Due Anushka's fat body the shoot of Bahubali 2 may be postponed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil