கொரோனா பாதிப்பு.. அப்பா நன்றாக இருக்கிறார், வதந்தி பரப்ப வேண்டாம்.. பிரபல ஹீரோ மகள் திடீர் ட்வீட்!
சென்னை: அப்பா நன்றாக இருக்கிறார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பிரபல ஹீரோவின் மகள் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் மிரட்டிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்த கொடூர வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்

மலைகா அரோரா
இந்தியாவில் சமீப காலமாக, இதன் தாக்கம் குறைய தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் சாதாரண மக்களில் இருந்து பிரபலங்களையும் தாக்கி வருகிறது. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி, ஜெனிலியா, தமன்னா, ராஜமவுலி, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர், விஷால் உள்பட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

ராஜசேகர், ஜீவிதா
பின்னர் அவர்கள் சிகிச்சை பெற்று குணமாகினர். மலையாள படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிருத்வி ராஜூக்கும் சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, பிரபல நட்சத்திர தம்பதியான டாக்டர் ராஜசேகர், ஜீவிதா ஆகியோருக்கு குடும்பத்துடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

காதல், திருமணம்
நடிகை ஜீவிதா, 80-களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். தமிழில், தப்புக் கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, தர்மபத்தினி, இளமை, நானே ராஜா நானே மந்திரி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர், 'இதுதான்டா போலீஸ்' ராஜசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கொரோனா பாதிப்பு
இவர்களுக்கு ஷிவானி, ஷிவாத்மிகா ஆகிய மகள்கள் உள்ளனர். ஐதராபாத்தில் வசித்து வரும் இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை டாக்டர் ராஜசேகர் உறுதிப்படுத்தி இருந்தார். 'மகள்கள் குணமடைந்துவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் இப்போது நன்றாக இருக்கிறோம். விரைவில் திரும்புவோம்' என்று கூறி இருந்தார்.

போராடி வருவதாக
இந்நிலையில், அவர் மகள் ஷிவாத்மிகா, கொரோனாவுடன் அப்பா கடுமையாகப் போராடி வருவதாகவும் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் இன்று காலை கூறியிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறினர். இது பரபரப்பானது.

பீதியடைய வேண்டாம்
இதையடுத்து அவர் மற்றொரு ட்வீட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி சொல்ல இயலாது. தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. நன்றாக இருக்கிறார். உடல்நலம் பெற்று வருகிறார். உங்கள் பிரார்த்தனைகள் தேவை. பீதியடைய வேண்டாம். வதந்தி பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











