உறவின் பெருமையை கூறும் படம் ‘ராஜவம்சம்‘… நடிகை ரேகா பேச்சு !
சென்னை : உறவுகளின் பெருமைகளையும் கூறும் திரைப்படமாக ராஜவம்சம் உருவாக்கப்பட்டுள்ளதாக நடிகை ரேகா கூறியுள்ளார்
இத்திரைப்படத்தில், சசிக்குமார், நிக்கி கல்ராணி, யோகி பாபு, சதிஷ், தம்பி ராமையா, விஜயகுமார்,மனோ பாலா, சாம்ஸ், ரேகா என்று பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.
இந்த படத்தை டி.டி ராஜா மற்றும் டி.ஆர்.சஞ்சய் குமார் இணைந்து தயாரித்து உள்ளனர். சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவு செய்ய,இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் சாம் சிஎஸ் .

ராஜவம்சம்
நடிகர் சசிகுமார், நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள படம் ராஜவம்சம். இந்த படத்தை சுந்தர் சி யின் உதவி இயக்குனர் கே.வி.கதிர்வேல் இயக்கியுள்ளார். பெரும்பாலும் செண்டிமெண்ட் சார்ந்த கதையையே சசிகுமார் தேர்ந்தெடுப்பார் அந்த வகையில் ராஜவம்சமும் முழு சென்டிமென்ட் கமர்ஷியலாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

நவம்பர் 26ந் தேதி ரிலீஸ்
இத்திரைப்படம் நவம்பர் 26ந் தேதி வெளியாக உள்ளது. குடும்பத்தோடு வந்து இந்த படத்தை ரசிப்பதற்காகவே இயக்குனர் ராஜவம்சம் படத்தை திரையில் தான் ரிலீஸ் செய்வேன் என அடம் பிடித்தார்.

ரேகா
இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகை ரேகா, ராஜவம்சம் திரைப்படத்தில் நடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம், நான் கூட்டுக்குடும்பத்துடன் இருந்து இருக்கேன். ஆனால், கல்யாணத்திற்கு பிறகு அது மாறிவிட்டது. இந்த படத்தில் நடிக்கும் போது ரொம்ப ஜாலியா இருந்தது. நடிகர் சசிகுமார் மிகவும் அற்புதமானவர், யார் என்ன பேசியிட்டு இருந்தாலும் அவர் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார். கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், உறவுகளின் பெருமைகளையும் கூறும் படமாக ராஜவம்சம் உருவாக்கப்பட்டுள்ளது . இதுபோன்ற திரைப்படங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க என்றார் ரேகா.
சசிக்குமார்
முன்னதாக பேசிய சசிக்குமார், இந்த திரையில் வெளியிட தயாரிப்பாளர் மிகவும் சிரமப்பட்டார். ராஜவம்சம் ஒரு கூட்டுக்குடும்பக் கதை என்பதால் உடனே ஒகே சொல்லிட்டேன், நானும் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்தவன் தான் என்றார் சசிக்குமார்.


Click it and Unblock the Notifications











