ரஜினியுடன் டூயட்.. 'நெடுநாள் ஆசை தீர்ந்தது'.. அனுஷ்கா மகிழ்ச்சி!
ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லிங்கா படத்தில் அவருடன் ஒரு காதல் பாடலில் நடித்ததன் மூலம் தன் நெடு நாள் ஆசை நிறைவேறியதாக நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் 40 நாட்கள் படமாக்கப்பட்ட ரஜினியின் லிங்கா குழு, கடந்த சில வாரங்களாக ஹைதராபாதில் நிலை கொண்டுள்ளது.
கடந்த வாரம் வெளிப்புறப் படப்பிடிப்பிலிருந்து அன்னப்பூர்ணா ஸ்டுடியோவுக்கு இடம்பெயர்ந்தது இந்தக் குழு.

ஓய்வில்லாத ரஜினி
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், நிச்சயம் ரஜினி பிறந்த நாளன்று வெளியாக வேண்டும் என்பதில் குழுவினர் தீவிரமாக உள்ளனர். ரஜினியும் ஓய்வின்றி தொடர்ந்து இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

சோனாக்ஷி
இந்தப் படத்தில் ஒரு ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷியும், இன்னொரு ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்காவும் நடித்து வருகிறார். இவர்களில் சோனாக்ஷி ஏற்கெனவே இரு பாடல் காட்சிகளில் ரஜினியுடன் நடித்து முடித்துவிட்டார். அவரது இறுதிக் கட்ட காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன.

அனுஷ்கா
இள வயது ரஜினிக்கு ஜோடியாக வரும் அனுஷ்காவின் காட்சிகள்தான் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. ரஜினி - அனுஷ்கா பங்கேற்கும் ஒரு பாடல் காட்சி சமீபத்தில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது.

நீண்ட நாள் கனவு
ரஜினி சாருடன் நடிப்பது நீண்ட நாள் கனவு. அது லிங்காவில் எனக்கு நிறைவேறியது. அவருடன் டூயட் பாடலில் ஆடியது மறக்க முடியாத அனுபவம், என்று தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா.

ஸ்பெஷல் செட்
ரஜினி - அனுஷ்கா பாடல் காட்சிக்கென படத்தின் கலை இயக்குநர் சிறப்பு பின்னணியை வடிவமைத்திருந்தார். கேஎஸ் ரவிக்குமார் தனக்கே உரிய வேகத்தில் இந்தப் பாடலை காட்சிப்படுத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











