ஹைய்யா.. சூப்பர் ஸ்டார் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டார்! - துள்ளிக் குதிக்கும் நடிகை
சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்துப் பேச மாட்டோமா என்பது பலருக்கும் கனவாக இருக்கிறது. சாமானியர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகினருக்கும் கூட.
அப்படி இருக்கும் போது அவரிடமிருந்தே வாழ்த்துச் சொல்லி போன் கால் வந்தால் எப்படியிருக்கும்!

நடிகை லட்சுமி ராய்க்கு சமீபத்தில் அப்படி ஒரு போன் கால் வந்தது, சூப்பர் ஸ்டார் ரஜினியிடமிருந்து.
மே 5-ம் தேதி லட்சுமி ராய்க்கு பிறந்த நாள். அன்றைய தினம் அவருக்கு சூப்பர் ஸ்டாரிடமிருந்து வாழ்த்துச் செய்தி போனில் வந்ததாம்.
இதுகுறித்து லட்சுமி ராய் கூறுகையில், "இன்று எனக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. இந்த நாள் என் வாழ்வில் சிறப்பான நாள். இந்த நாட்டின் இணையற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் வாழ்த்தால் நான் ஆசீர்வதிக்கப்பட்டேன்," என்றார்.
அன்றுதான் ரஜினி ட்விட்டரில் இணைந்து ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சி தந்தார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











