ஒரு மகானைப் போன்றவர் ரஜினிகாந்த்! - சோனாக்ஷி சின்ஹா
ரஜினியுடன் நடித்த போதுதான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். ஒரு மகானைப் போன்றவர் அவர் என்று தெரிவித்துள்ளார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
லிங்கா' படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார் பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இந்த படத்தில் நடித்த அனுபவங்களை அவர் அடிக்கடி பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்.

மகான் ரஜினி
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "வாழ்க்கையில் சில மகான்களை சந்திக்கும் போது நம்மை அறியாமலேயே நமக்குள் சில மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஒரு மாற்றத்தை ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்த போது நான் அனுபவித்தேன்.

யாரிடமும் இல்லாத விசேஷம்
இந்தியில் சல்மான்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான், சாகித்கபூர் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் தெரியாத பல விஷயங்களை ரஜினியுடன் நடித்த போது தெரிந்து கொண்டேன். ரஜினி மகானை போன்றவர்.

ரஜினி ஒரு பல்கலைக் கழகம்
அவரை ஒரு பல்கலை கழகம் என்று கூடச் சொல்லலாம். ரஜினிக்கு தெரியாத விஷயங்களே இல்லை. மற்றவர்களுக்கு தெரியாத நிறைய விஷயங்களை அவர் தெரிந்து வைத்து இருக்கிறார். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்.

விலைமதிப்பில்லா நாட்கள்
ரஜினியுடன் பணியாற்றிய ஒவ்வொரு நாட்களும் விலை மதிப்பு இல்லாதவை. படிப்படியாக முன்னேறி யாரும் தொட முடியாத உயரத்துக்குப் போய் விட்ட மகான் அவர்.

ஆன்மீகம்
என்னிடம் அவர் அனுபவங்கள் பற்றி நிறைய சொன்னார். இதன் மூலம் எனக்குள்ளும் பக்தி விதையை அவர் ஊன்றிவிட்டார்.

பருமன்
உடல் பருமனாக இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல என்று நிறைய பேர் சொல்ல கேட்டு இருக்கிறேன். ஆனால் அதை ரஜினி சொன்னவிதம் புதுமையாக இருந்தது. அவர் சொல்லி அதை கேட்கும் போது உடம்பு ஒரு கோவில் மாதிரி தெரிந்தது. கேமராவுக்கு முன்னால் நிற்கும் ரஜினியும் பின்னால் நிற்கும் ரஜினியும் வெவ்வேறானவர்கள். ரஜினியால் நான் ரொம்ப மாறி விட்டேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











