விஜய்யை ஃபாலோ செய்தாரா கீர்த்தி சுரேஷ்.. அதெல்லாம் ரொம்ப தப்புங்க.. ஓபனாக பேசிய இயக்குநர்

சென்னை: தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். கடந்த வருடம்தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது. தனது பல வருட காதலரான ஆண்டனி தட்டிலைத்தான் அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தச் சூழலில் கீர்த்தி சுரேஷ் குறித்து ரஜினி முருகன் திரைப்படத்தின் இயக்குநர் பொன்ராம் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன், பைரவா, சாமி 2, தானா சேர்ந்த கூட்டம், தொடரி, சர்கார் என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். இவற்றில் அவருக்கு வெற்றியும், தோல்வியும் கலந்தே கிடைத்தன. இதன் காரணமாக கீர்த்தியின் மார்க்கெட் தமிழில் உயரவும் இல்லாமல் அதள பாதாளத்திற்கு செல்லவும் இல்லாமல் ஒரு நேர்கோட்டில் பயணித்துக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Rajini Murugan Director Ponram Talks about Keerthy Suresh And Vijay

தேசிய விருது: இப்படிப்பட்ட சூழலில் தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்தார் அவர். அந்தப் படம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. சாவித்திரியாக கீர்த்தி நடித்துவிடுவாரா என்றுதான் பலரும் சந்தேகப்பட்டார்கள். ஆனால் படம் ரிலீஸானதும் சந்தேகப்பட்டவர்கள் எல்லாம் கைகளை தட்டினார்கள். மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழில் அவர் மாமன்னன், சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் மாமன்னன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது.

திருமணம் செய்த கீர்த்தி: இதற்கிடையே கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் பரவின. ஆனால் அவர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தனது நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இந்தக் காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு கடந்த வருடம் கோவாவில் வைத்து திருமணம் நடந்தது. இதில் விஜய், திரிஷா, அட்லீ என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.

விஜய்யின் தீவிர ரசிகை: கீர்த்தி சுரேஷை பொறுத்தவரை அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை. கீர்த்தி கல்லூரி படிக்கும்போது ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றார் விஜய். அப்போது அவரை கூட்டத்தில் ஒருவராக நின்று பார்த்து ரசித்தவர் அவர். பிறகு நடிக்க வந்து விஜய்க்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்துவிட்டார். தான் ஒரு வெறித்தனமான விஜய்யின் ரசிகை என்று அவரே பல மேடைகளில் சொல்லியதுண்டு. சூழல் இப்படி இருக்க அவர் பல எக்ஸ்ப்ரெஷன்களில் குறிப்பாக ரஜினி முருகன் படத்தில் இடம்பெற்ற உன் மேல ஒரு கண்ணு பாடலில் விஜய்யை இமிட்டேட் செய்தார் என்கிற விமர்சனங்கள் எழுந்ததுண்டு.

Rajini Murugan Director Ponram Talks about Keerthy Suresh And Vijay

பொன்ராம் பேட்டி: இந்நிலையில் அதுகுறித்து ரஜினி முருகன் இயக்குநர் பொன்ராம் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கீர்த்தி சுரேஷ் எனக்கு ரொம்பவே பிடித்த ஹீரோயின். அவரிடம் பிடித்த விஷயமே அந்த மேனரிசம்தான். அந்தப் பாடலில் கீர்த்தி சுரேஷ் விஜய்யை ஃபாலோ செய்தார் என்று எல்லோரும் சொன்னார்கள். அது தவறான புரிதல் என்றுதான் நான் கூறுவேன். கீர்த்தியின் ஒரிஜினல் மேனரிசமே அதுதான். அதனால்தான் அதனை அந்தப் பாடலில் வைக்க சொல்லி பிருந்தா மாஸ்டரிடம் கேட்டோம். கீர்த்தி சுரேஷ் திறமையான நடிகை. யாரையும் ஃபாலோ செய்து அவர்களை போல் நடிக்கவேண்டும் என்று அவர் நினைத்ததே இல்லை" என்றார்.

ரஜினி முருகன் திரைப்படம்தான் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்து சென்றது. மெகா ப்ளாக் பஸ்டரான அந்தப் படம் மார்ச் 14ஆம் தேதி ரீ ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு தனியார் சேனலில் தொகுப்பாளராக வென்றவர் சிவகார்த்திகேயன். அப்போது அவரை கவனித்த தனுஷ் தனது முன்னாள் மனைவி இயக்கி தான் ஹீரோவாக நடித்த 3 படத்தில் ஒரு ரோல் கொடுத்தார். அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அவர். இதற்கிடையே பாண்டிராஜ் இயக்கத்தில் மெரீனா, எழில் இயக்கத்தில் மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் சிவகார்த்திகேயன். அந்தப் படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன.

ரஜினி முருகன்: தொடர்ந்து ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த அவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம் மெகா ஹிட்டானதை அடுத்து ரஜினிமுருகன் படத்தில் நடித்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக குறுகிய காலத்துக்குள்ளாகவே டாப் 10 ஹீரோக்களுக்குள் வந்துவிட்டார் சிவகார்த்திகேயன். அதேபோல் நடனம், நடிப்பு என அத்தனை ஏரியாக்களிலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார் அவர்.

100 கோடி க்ளப்: சூழல் இப்படி இருக்க நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் திரைப்படம் மெகா ஹிட்டானது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட டாக்டர் நூறு கோடி க்ளப்பில் இணைந்தது. அடுத்ததாக அவர் நடித்த டான் திரைப்படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. தொடர்ந்து நடித்த பிரின்ஸ் திரைப்படம் தோல்வியடைந்தாலும் அடுத்ததாக வெளியான மாவீரன், அயலான் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

அமரன் மெகா ஹிட்: மாவீரன், அயலான், டான், டாக்டர் ஆகிய படங்களைவிடவும் சிவகார்த்திகேயனை உச்சத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது அமரன் திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் கடந்த வருடம் வெளியாகி உலகளவில் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை 50 கோடி ரூபாய்வரை உயர்த்தியிருப்பதாக திரைத்துறையில் பேச்சுக்கள் சமீபமாக எழுந்திருக்கின்றன. அடுத்ததாக மதராஸி படத்தில் நடித்திருக்கும் அவர் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார்.

ஏ.ஆருக்கு முக்கியமான படம்: மதராஸி படத்தை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் போலவே முருகதாஸும் இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். ஏனெனில் அவர் கடைசியாக எப்போது ஹிட் படம் கொடுத்தார் என்று அவரிடம் கேட்டால் அவருக்கே பதில் தெரியாது. அவ்வளவு காலம் ஆகிவிட்டது முருகதாஸ் ஹிட் கொடுத்து. நிச்சயமாக இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக கொடுத்து; தன்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் கடுமையாக இயக்குநர் உழைத்துவருவதாகவும்; அதற்கு சிவகார்த்திகேயனும் முழு ஒத்துழைப்பு கொடுத்திருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

More from Filmibeat

Read more about: keerthy suresh vijay ponram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X