ரஜினி, விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஆதரவு? குஷ்பு பதில்

By Veera Kumar

சென்னை: அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வது குழந்தைத்தனமானது, முதிர்ச்சியில்லாத செயல் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி, விஜய் இவர்கள் அரசியலுக்கு வந்தால், இருவரில் யாருக்கு தனது ஆதரவு என்ற கேள்விக்கும் குஷ்பு பதிலளித்துள்ளார்.

திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, சின்னத்திரைகளில் பிசியாக உள்ளார். இந்நிலையில், டிவிட்டரில் பாலோவர்களுடன் அவர் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு குஷ்பு அளித்த பதில்களில் சில சுவையான தொகுப்பை பார்க்கலாமா...

மனம் கவர்ந்த கார்த்திக்

மனம் கவர்ந்த கார்த்திக்

தமிழ் படங்களில், எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமானது மவுனராகம். சமீபத்தில் வந்த படங்களில் பிடித்தது என்று கேட்டால் ஜிகர்தண்டாவை சொல்வேன். தமிழ் ஹீரோக்களில் நவரச நாயகன் கார்த்திக்தான் என் மனம் கவர்ந்தவர். அரவிந்த் சாமியும் எனக்கு பேவரைட்தான்.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

கிரிக்கெட்டை பொறுத்தளவில் ராகுல் டிராவிட்டும், ரவி சாஸ்திரியும் எனக்கு விருப்பமான ஆட்டக்காரர்கள். இப்போதுள்ள ஹீரோக்களில் விஷாலுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது ஆசை.

நாத்திகராக மாறிய நாள்

நாத்திகராக மாறிய நாள்

ஆனந்தயாழை மீட்டுகிறேன் பாடல் எனக்கு மிகவும் பேவரைட். கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 100 (உண்மையில் 94 குழந்தைகள்) குழந்தைகள் கருகி இறந்த சம்பவத்துக்கு பிறகுதான் நான் நாத்திக பாதையில் செல்ல ஆரம்பித்தேன்.

தன்னம்பிக்கைதான் ஆடை

தன்னம்பிக்கைதான் ஆடை

பெண்ணுக்கு ஏற்ற ஆடை தன்னம்பிக்கைதான். என்னிடம் எனக்கு பிடித்ததும் தன்னம்பிக்கைதான். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தால் இளமையாக இருக்க முடியும்.

முதிர்ச்சியில்லையே..

முதிர்ச்சியில்லையே..

சமூக வலைத்தளங்களில் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது குழந்தைத்தனமானது மற்றும் முதிர்ச்சியற்ற செயல். தமிழில் சமந்தாவும், தெலுங்கில் அனுஷ்காவும் சிறந்த நடிகைகளாக இருப்பார்கள். இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கா, விஜய்க்கா?

ரஜினிக்கா, விஜய்க்கா?

ரஜினிகாந்த்தும், விஜயும் அரசியலில் பிரவேசித்தால், உங்களது ஆதரவு யாருக்கு என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள குஷ்பு, அவர்கள் முதலில் அரசியலுக்கு வரட்டும், அப்புறம் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார். 2016 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் ரஜினியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விஜயும் அப்போது தனியாக அரசியலில் குதிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X