என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது ரஜினி அறிவுரை! - சோனாக்ஷி
ரஜினியுடன் நடிக்கும் நடிகைகள் அவரைப் பற்றி, அவருடன் நடித்த அனுபவங்கள் குறித்து அளிக்கும் பேட்டிகளைத் தொகுத்தால் ஒரு புத்தகமே போடலாம். அவ்வளவு சொல்கிறார்கள்.
இதோ ரஜினியின் லேட்டஸ்ட் ஜோடி சோனாக்ஷி சின்ஹா சொல்வதைப் படியுங்கள்...

ரோல் மாடல் ரஜினி
இந்தியில் சல்மான்கான், அஜய்தேவ்கான், சாகித்கபூர் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். ஆனாலும் எனக்கு ரோல் மாடலாக இருப்பது ரஜினிதான்.

லிங்கா அனுபவம்
அவருடன் ‘லிங்கா' படத்தில் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது. நிறைய கதாநாயகர்களுடன் நடித்த போதெல்லாம் கிடைக்காத அனுபவம் லிங்காவில் ரஜினியுடன் நடித்தபோது கிடைத்தது.

பல்கலைக் கழகம்
ரஜினி நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். உடம்பை கோவில் மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை சொன்னார். அவர் ஒரு பல்கலைக்கழகம் மாதிரிதான் எனக்குத் தெரிந்தார்.

எளிமையும் அன்பும்
எளிமையாகவும் அன்பாகவும் பழகினார். அவரிடம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.

கேமராவுக்குப் பின்னால்...
படப்பிடிப்பில் கேமரா முன்னால் இருக்கும் ரஜினி கேமரா பின்னால் இருக்கும் ரஜினி என இரு வேறு ரஜினியை பார்த்தேன். எனக்கு கேமரா பின்னால் இருந்த ரஜினியை ரொம்பப் பிடித்தது.
-இவ்வாறு கூறியுள்ளார் சோனாக்ஷி.


Click it and Unblock the Notifications











