விமானத்துக்குள்ள இப்படி நெருக்கியடிச்சுட்டு இருந்தா என்னங்க அர்த்தம்..? தனுஷ் பட ஹீரோயின் சாடல்!
சென்னை: சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விமானத்துக்குள் நெருக்கியடித்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம் என்று கேட்டுள்ளார் தனுஷ் பட ஹீரோயின்.
Recommended Video
கொரோனாவால் விதிக்கப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இரண்டு மாதமாக ரத்து செய்யப்பட்டிருந்த உள்ளூர் விமான போக்குவரத்துகள் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்
இதில் சமூக இடைவெளியை பின்பற்றுவது உட்பட சில விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்குனரகம் விதித்துள்ளது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மூன்று பேர் அமரும் வகையில் இருக்கும் இருக்கையில் நடு இருக்கையை , சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு காலியாக வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

நடு இருக்கை
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மும்பை நீதிமன்றம், நடு இருக்கையை காலியாக விட தேவையில்லை என்று கூறியிருந்தது. இந்நிலையில் விமானத்துக்குள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பயணிகள் நெருங்கி நிற்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ரஜிஷா விஜயன்.

என்னதான் பயன்?
அதில், நடு இருக்கையை காலியாக விட்டும் முகக்கவசம் அணிந்தும் கொரோனா பரவாமல் தடுக்க விமான நிலைய ஊழியர்களும் விமான கேபின் ஊழியர்களும் அவ்வளவு தூரம் எடுக்கும் முயற்சிகளுக்கு என்னதான் பயன்? இறுதியில் இப்படி நடந்துகொண்டால், என்ன அர்த்தம்? விமானம் நிற்கும்போது இறங்குவதற்கு அப்படி என்ன அவசரம் என்று எனக்குத் தெரியவில்லை.

இந்திய மனநிலை
நண்பர்களே, சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அது உங்களுக்காக மட்டுமல்ல, எல்லோருக்காகவும் என்று தெரிவித்துள்ளார். இதை ரசிகர் பலர் ஆதரித்துள்ளனர். 'இதுதான் இந்திய மனநிலை. கொரோனா வந்தும் அவர்கள் திருந்தவில்லை என்று ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனாவை மீண்டும் வாங்குவதில் அவ்வளவு ஆர்வம் என்று இன்னொருவர் தெரிவித்துள்ளார்.

கர்ணன் படத்தில்
நடிகை ரஜிஷா விஜயன், கர்ணன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இதை மாரி செல்வராஜ் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு, தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார். ரஜிஷா மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











