நம்ம பைசன் அக்காவா இது.. ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம்.. ஷாக் ஆக்கிய ரஜிஷா விஜயன்!

சென்னை: கடந்த ஆண்டு தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் படத்தில் நாயகனின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து ஸ்கோர் செய்திருந்தார் ரஜிஷா விஜயன். தமிழில் ஏற்கனவே கர்ணன், ஜெய்பீம், சர்தார் உள்ளிட்ட படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் நல்ல நடிகை என்கிற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார் ரஜிஷா.

கடந்த ஆண்டு இறுதியில் மம்மூட்டி நடிப்பில் வெளியான களம் காவல் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். இந்நிலையில், சமந்தா போல சட்டெனெ கவர்ச்சி உடையில் குத்தாட்ட பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் திணற வைத்துள்ளார்.

Rajisha VIjayan item song glamour dance stuns south india fans

யாருங்க நம்ம பைசன் அக்காவா இப்படி ஒரு ஐட்டம் பாடலுக்கு அல்ட்ரா கவர்ச்சியில் ஆட்டம் போட்டது, என்னங்க ஆச்சு அவருக்கு என மலையாள ரசிகர்கள் முதல் தமிழ் சினிமா ரசிகர்கள் வரை ஷாக் ஆகியுள்ளனர்.

கர்ணன் முதல் பைசன் வரை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் ஹீரோயினாக நடித்த ரஜிஷா விஜயன் தனது நடிப்பால் தடம் பதித்தார். மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பைசன் படத்தில் துருவ் விக்ரமுக்கு அக்காவாகவும் பசுபதிக்கு மகளாகவும் நடித்திருந்தார். சூர்யாவின் ஜெய் பீம் மற்றும் கார்த்தியின் தீபாவளி ரிலீஸ் படமான சர்தார் படத்தில் ஃபிளாஷ்பேக் போர்ஷன் சர்தாருக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

Rajisha VIjayan item song glamour dance stuns south india fans
Photo Credit:

கோமல தாமரா: மலையாள இயக்குநர் கிரிஷாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள மஸ்திஸ்கா மரணம் படத்தில் இடம்பெற்றுள்ள கோமல தாமரா எனும் ஐட்டம் பாடலுக்குத்தான் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை பகீராக்கியுள்ளார் ரஜிஷா விஜயன். மலையாள நடிகைகள் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் கச்சிதமாக நடிப்பார்கள் என்பது போல ஐட்டம் டான்சராகவும் அதிர வைத்துவிட்டார் ரஜிஷா விஜயன்.

கவர்ச்சி உடையில் குத்தாட்டம்: சிகப்பு நிற அல்ட்ரா கிளாமர் உடையில் ரஜிஷா விஜயன் ஸ்க்ரீனில் தோன்றி நடனமாடும் லிரிக் வீடியோ வெளியாகி மலையாள ரசிகர்களையும் தமிழ் சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு சர்தார் 2 படத்தில் ரஜிஷா விஜயனை பார்க்க நினைத்த ரசிகர்களுக்கு அதற்கு முன்னதாகவே ஒரு செம சர்ப்ரைஸாக இந்த பாடல் அமைந்துள்ளது. அக்கா கதாபாத்திரங்கள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்த நிலையில், ரூட்டை மாற்றிவிட்டாரா ரஜிஷா என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X