என்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி

By Siva

Recommended Video

சண்டக்கோழி 2 பத்திரிக்கையாளர் சந்திப்பில் வரலட்சுமி- வீடியோ

சென்னை: நடிகை வரலட்சுமி கல்லூரி மாணவி போல் இருக்கிறார் என ராஜ்கிரண் சொன்னதாக அவர் தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Rajkiran praises Varalakshmi

அப்போது பேசிய நடிகை வரலட்சுமி, இப்படத்தில் விஷாலுக்கு சமமான மாஸ் காட்சி, ஹீரோயிக் மூவ்மென்ட் போன்ற விஷயங்கள் அவருக்கும் இருப்பதாகவும், ஒளிப்பதிவாளர் சக்தி அவரை மிக அழகாக காட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

கஞ்சா கருப்பு, முனிஷ்காந்த் போன்றவர்களோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனாலும், அவர்களை பார்த்தாலே சிரிப்பு வருமளவுக்கு நடித்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

சர்கார் படம் போல இப்படத்திலும் கீர்த்தி சுரேஷுடன் காம்பினேஷன் காட்சி இல்லை என்று சொன்ன வரலட்சுமி, கீர்த்தி ஒரு மிகச் சிறந்த நடிகை. பல உயரங்களைத் தொடுவார் என புகழ்ந்தார்.

நடிகர் ராஜ்கிரனோடு ஒரு சிறிய காட்சியில் நடித்ததாகவும், அப்போது வரலட்சுமியைப் பார்த்து 'எம்மா நீ வில்லி மாதிரி இல்லம்மா காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருக்க' என சொன்னதாகவும் தெரிவித்தார். அதனால் பயந்துபோன வரலட்சுமி எடையை கூட்டி, பக்கா வில்லியாக மாறினாராம்.

அதேபோல், ஹீரோவுக்கு இணையான ஒரு பெண் கதாபாத்திரத்தை எழுதியதற்காக இயக்குனர் லிங்குசாமிக்கு நன்றி கூறினார். மாஸான குடும்ப படமாக தயாராகியிருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X