twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜ் தாக்கரேவை எதிர்த்து போட்டியிட அஞ்சவில்லை: கட்சி தாவிய நடிகை ராக்கி சாவந்த்

    By Siva
    |

    மும்பை: ராஷ்ட்ரிய ஆம் ஆத்மி கட்சியை துவங்கி லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த நடிகை ராக்கி சாவந்த் குடியரசுக் கட்சியில் சேர்ந்துள்ளார். அவர் மகாராஷ்டிரா முதல்வராக விரும்புகிறார்.

    பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ராஷ்ட்ரிய ஆம் ஆத்மி என்ற கட்சியை துவங்கி அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். வடமேற்கு மும்பையில் போட்டியிட்ட அவருக்கு வெறும் 1, 995 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

    இதையடுத்து கட்சியை கலைத்துவிட்டு வேறு எந்த கட்சிக்கு தாவலாம் என்று இருந்த அவர் முன்னாள் லோக்சபா உறுப்பினரான ராம்தாஸ் அதாவாலேவின் குடியரசு கட்சியில் கடந்த சனிக்கிழமை இணைந்துள்ளார்.

    முதல்வர்

    முதல்வர்

    இதை சொல்வதற்காக மன்னித்துவிடுங்கள் அதாவாலே ஜி. ஆனால் வருங்காலத்தில் நான் நிச்சயம் மகாராஷ்டிரா முதல்வர் ஆவேன் என்று ராக்கி தெரிவித்துள்ளார்.

    ராஜ் தாக்கரே

    ராஜ் தாக்கரே

    நான் யாரை பார்த்தும் பயப்படவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை எதிரித்து போட்டியிட அஞ்சவில்லை என்கிறார் ராக்கி.

    ஒத்திகை

    ஒத்திகை

    லோக்சபா தேர்தலில் மண்ணை கவ்வினீர்களே என்றால் அது ஒத்திகை தற்போது அனுபவத்தோடு போட்டியிடுகிறேன் என்கிறார் ராக்கி.

    பதவி

    பதவி

    ராக்கி அதாவாலேவின் கட்சியில் சேர்ந்த கையோடு மாநில மகளிர் அணி தலைவி ஆகிவிட்டார். அடுத்து முதல்வர் ஆக துடித்துக் கொண்டிருக்கிறார்.

    ராக்கி

    ராக்கி

    சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து ராக்கி இன்னும் முடிவு செய்யவில்லை. அவர் போட்டியிட தீர்மானித்தால் அவருக்கு சீட் வழங்கப்படும் என்று ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.

    English summary
    Actress Rakhi Sawant who has joined Ramdas Athawale's RPI is sure about becoming CM in future.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X