அண்ணல் அம்பேத்கர் மனைவி வேடத்தில் நடிக்கும் ராக்கி சாவந்த்
டாக்டர் அம்பேத்கரின் மனைவி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்.
இந்தியாவின் மாபெரும் ஒப்பற்ற தலைவரான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையை தி காட்ஃபாதர் ஆப் இந்தியா என்ற தலைப்பில் படமாகத் தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் அம்பேத்கரின் இரண்டாவது மனைவி சவீதா வேடத்தில் நடிக்கிறார் ராக்கி. சவீதா பாய் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேடத்தில்தான் ராக்கி நடிக்கிறார்.
சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் பூஜையில் அவர் கலந்து கொண்டார். பிரபல பின்னணிப் பாடகர் உதித் நாராயணனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்தப் படத்தில் தான் நடிப்பது குறித்து ராக்கி சாவந்த் கூறுகையில், "மாபெரும் தலைவர் அம்பேத்கர். அவர் ஒரு மகான். அவரது வாழ்க்கைச் சரித்திரம் பற்றிய படத்தில் எனக்கு இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











