அரசியலைத் தொடர்ந்து விளையாட்டில் தடம் பதிக்கிறார் ராக்கி சாவந்த்....?

மும்பை: நடிகை ராக்கி சாவந்த் இருக்கும் இடங்களில் பரபரப்பிற்கு குறைவில்லாமல் இருக்கும் என்று கூறினால் அது மிகையில்லை. திரைப்படங்களில் ஐயிட்டம் பாடல், தொலைக்காட்சி நிகழ்ச்சி, அரசியல் என பரபரப்பைக் கிளப்பிய ராக்கி, தற்போது கால்பந்து போட்டியை தனது கையிலெடுத்திருக்கிறார்.

பாலிவுட் படங்களில் ஐட்டம் பாடல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ராக்கி சாவந்த். அதனைத் தொடர்ந்து மணமகனைத் தேர்ந்தெடுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சர்ச்சையில் சிக்கினார். அதில் கிடைத்த புகழைத் தொடர்ந்து அரசியலில் கால் பதிக்கத் திட்டமிட்டார் ராக்கி சாவந்த்.

பாஜகவில் இருந்து அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதனை நிராகரித்த ராக்கி, ராஷ்ட்ரிய ஆம் ஆத்மி கட்சி என்ற பெயரில் கட்சித் தொடங்கி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் தோல்வியே அவருக்குப் பரிசாகக் கிடைத்தது.

முதல்வர் கனவு....

முதல்வர் கனவு....

இதையடுத்து கட்சியை கலைத்துவிட்டு வேறு எந்த கட்சிக்கு தாவலாம் என்று இருந்த அவர், மகாராஷ்டிராவின் முதல்வராகும் திட்டத்தோடு முன்னாள் லோக்சபா உறுப்பினரான ராம்தாஸ் அதாவாலேவின் குடியரசு கட்சியில் கடந்த சனிக்கிழமை இணைந்தார்.

ராக்கி காய்ச்சல்...

ராக்கி காய்ச்சல்...

இந்நிலையில் தற்போது உலகெங்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி காய்ச்சலடிக்க, ராக்கி சிறுவர்களுடன் கால்பந்து விளையாடுவது போன்ற வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மழையோடு விளையாட்டு...

மழையோடு விளையாட்டு...

மிதமான மழைக்கு இடையில், ராக்கி சிறுவர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடுவது போன்று அதில் காட்சிகள் பதிவாகியுள்ளது. அக்காட்சிகளில் கால்பந்து விளையாடுவதற்கான பிரத்யேக உடை அணிந்து ராக்கி காணப்படுகிறார்.

வேடிக்கை...

வேடிக்கை...

சிறுவர் சிறுமிகளுடன் வெகு சந்தோஷமாக ராக்கி கால்பந்து விளையாடுகிறார். ராக்கி விளையாடுவதை மற்ற குழந்தைகள் சுவாரஸ்யமாக வேடிக்கைப் பார்க்கின்றனர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

கால்பந்தை மேலும் பிரபலப் படுத்துவதற்காக இந்த விளம்பரமா அல்லது தனது அரசியல் வாழ்க்கை விளம்பரத்திற்காக இந்த விளையாட்டா என்ற ரகசியம் ராக்கிக்கு மட்டுமே வெளிச்சம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X