»   »  ஓய் சன்னி லியோன், இந்தியாவை விட்டு மரியாதையா ஓடிப்போய்விடு: ராக்கி சாவந்த்

ஓய் சன்னி லியோன், இந்தியாவை விட்டு மரியாதையா ஓடிப்போய்விடு: ராக்கி சாவந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சன்னி லியோன் மரியாதையாக இந்தியாவை விட்டும், பாலிவுட்டை விட்டும் ஓடிப் போய்விடு என்று இந்தி நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்ததோடு மட்டும் அல்லாமல் தயாரிப்பு நிறுவனம் துவங்கி அத்தகைய படங்களை தயாரித்து வந்தவர் சன்னி லியோன். இந்நிலையில் பாலிவுட்டில் நுழைந்த அவர் கவர்ச்சியை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சன்னி, சல்மான், கோஹ்லி பற்றி கூறுகையில்,

சன்னி

சன்னி

ஏய், சன்னி லியோன் மரியாதையாக இந்தியாவையும், பாலிவுட்டையும் விட்டு ஓடிப் போய்விடு. வெளிநாட்டுக்கு சென்று நீ வழக்கம்போல லாலிபாப் சாப்பிடு, ஏற்கனவே நீ செய்ததை செய். அதை எல்லாம் இங்கு செய்ய நினைக்காதே.

சல்மான்

சல்மான்

எனக்கு சல்மான் கான் என்றால் உயிர். ஐ லவ் யூ சல்மான். நல்ல வேளையாக வழக்கில் அவருக்கு சாதமாக தீர்ப்பு வந்தது. அவர் மிகவும் நல்லவர். சல்மான் விபத்தை ஏற்படுத்தவில்லை. அவரது டிரைவர் தான் விபத்தை ஏற்படுத்தினார்.

கோஹ்லி

கோஹ்லி

நான் திருமணம் செய்ய முடியாது. காரணம் நான் காதலிக்கும் விராட் கோஹ்லி அனுஷ்கா சர்மாவை காதலிக்கிறார். அனுஷ்கா, கோஹ்லியை விட்டு தள்ளி இருங்கள். இல்லை என்றால் நமக்குள் சண்டை தான் வரும் என்கிறார் ராக்கி.

மோட்டார்வாய்

மோட்டார்வாய்

ராக்கி சாவந்த் உளறித் தள்ளுவதால் தான் அவரை பாலிவுட்காரர்கள் மோட்டார்வாய் என்று கிண்டல் செய்கிறார்கள். ஆனால் அவர் அதை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை.

English summary
Bollywood actress Rakhi Sawant has asked Sunny Leone to leave India and to do whatever she was doing abroad earlier.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos