விஜயும் த்ரிஷாவும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்.. மெஹந்தி விழாவுக்கு வருவேன்.. நடிகை பேட்டி!
மும்பை: சர்ச்சைக்கு பெயர் பெற்ற பாலிவுட் நடிகையான ராக்கி சாவத், விஜயும், த்ரிஷாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பேட்டியில் கூறியிருப்பது இணையத்தில் டிரெண்டாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிக் கொண்டு இருந்த நேரத்தில், விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் என் கணவருக்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், இதனால் 2021ஆம் ஆண்டில் இருந்தே இருவரும் பிரிந்து வாழ்ந்துவருவதாக, நடிகையின் பெயரை குறிப்பிடாமல் சொல்லி இருந்தார். இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் மட்டுமில்லாமல், சினிமா வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியது.

விஜய், த்ரிஷா: இந்த சுனாமி அடங்குவதற்குள் தயாரிப்பாளரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக கலந்து கொண்டது மட்டுமில்லாமல் ஒரே காரில், ஒரே நிற உடை அணிந்து வந்திருந்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருவரின் உறவு குறித்து படுமோசமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இதுவரை விஜயோ, த்ரிஷாவோ இந்த விவகாரம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.
திருமணம் செய்ய வேண்டும்: இந்த நிலையில் Filmymantra Media-க்கு பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் பேட்டியில் விஜய், த்ரிஷா குறித்து பேசி இருந்தார். அதில், விஜயும் த்ரிஷாவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. அவர்கள் இருவரும் பொருத்தமான, அழகான ஜோடி. அவர்களின் திருமண மெஹந்தி விழாவில் நிச்சயம் நான் கலந்து கொள்வேன் என்றார். தொடர்ந்து த்ரிஷா குறித்து பேசிய அவர், த்ரிஷாவின் ஆரம்பகால போராட்டமான வாழ்க்கை என்ன என்று எனக்கு தெரியும், நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டு இருந்தோம். முதலில் த்ரிஷா பாலிவுட்டில் தான் படவாய்ப்பை தேடி அலைந்தார். அதன் பின் தான் தென்னிந்திய சினிமாவுக்கு சென்றார் என்றார்.
நடிகையின் ஆசை: அதேபோல் விஜயை வெகுவாக புகழ்ந்து பாராட்டிய ராக்கி சாவத், விஜயை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் மிகவும் நல்ல மனிதர். அவருடன் ஒரு பாடலுக்காவது நடனமாட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பு கிடைக்காததால், அவருடைய கட்சியிலேயே சேர்ந்து விடலாம் என நினைக்கிறேன் என நடிகை ராக்கி சாவத் பேசி உள்ளார். விஜய், த்ரிஷா திருமணம் செய்து கொள்ள வேண்டுமென நடிகை கூறி உள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications