தினமும் 50 ரூபாய் சம்பளம்... இன்று கோடிகளில் புரளும் நடிகை யார் தெரியுமா?

மும்பை: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். சினிமாவை தாண்டி இவரது தனிப்பட்ட வாழ்க்கை அவ்வப்போது சமூகவலைதளங்களில் விவாத பொருளாக மாறும். ராக்கி சாவந்தும் கோபத்துடன் நெட்டிசன்களை திட்டி தீர்ப்பார். ஆனால், இவர் சினிமாவில் வருவதற்கு முன்பு ஹோட்டலில் வெயிட்டராகவும், தினமும் ரூ.50 சம்பளம் என தனது வாழ்வில் நடந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

சுயம்வரம்: கடந்த 1997ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நடிகை ராக்கி சாவந்த் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி புகழ் பெற்றார். ஒரு சில படங்களில் கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த அவர், 2009ஆம் ஆண்டில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சி மூலம் ஓவர் நைட்டில் பிரபலம் அடைந்தார் ராக்கி சாவந்த். இவரது பெயரை தேடினால் அதனோடு சர்ச்சையும் ஒட்டிக்கொள்ளும். இந்திய திரைபிரபலங்கள் முதல் பிரதமர் மோடி வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்வார்.

rakhi Sawant video rakhi sawant bollywwod

திருமணம் - விவாகரத்து: 2019ல் வெளிநாடு வாழ் இந்தியரை திருமணம் செய்துகொண்ட ராக்கி பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதையடுத்து 2022ஆம் ஆண்டு தன்னை விட 11 வயது குறைந்த அடில்கான் தூரணி என்பவரை 2ஆவது திருமணம் செய்துகொண்டார். ராக்கியின் தாய் புற்றுநோயால் இறக்கும் நேரத்தில் தான் ராக்கிக்கும் அடிலுக்கும் ஐசியூவில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஒரே மாதத்தில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார் ராக்கி.

சர்ச்சை: என் மீது ஆசிட் வீசியதாகவும், நிர்வாண வீடியோ எடுத்து துன்புறுத்தியதாகவும் 2ஆவது கணவர் அடில்கான் மீது புகார் அளித்தார். அதன்பின்னர் மும்பை போலீசார் அடில்கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோன்று அவர் கலந்துகொள்ளும் விழா மேடையோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ சர்ச்சைக்குரிய விவாதமாக மாறிவிடும். அதேபோன்று ராமாயணம் எழுதிய வால்மீகி குறித்து ஆபாசமான கருத்தைக் கூறி இந்து மதத்தை இழிவுப்புடுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர், பிரதமர் மோடியிடம் நாட்டில் மின் விசிறிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்த கருத்து சர்ச்சையானது.

பச்சை மிளகாய்: ராஷ்ட்ரிய ஆம் கட்சி தொடங்கிய ராக்கி சாவந்த் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். ஒரு பெண் கட்சி தொடங்குவது பலருக்கும் பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார். பின்பு, உ.பி.முன்னாள் முதல்வர் மாயாவதி, மோடி, முலாயம் சிங் என யாரையும் விட்டு வைக்காமல் தனது பங்கிற்கு கடுமையாக விமர்சித்து பேசினார். எம்.பி. தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிட்ட அவர் தோல்வியுற்றார்.

rakhi Sawant video rakhi sawant bollywwod

போராட்டம்: ராக்கி சாவந்த் தனது 10 வயது முதலே வேலை செய்து வந்ததாகவும், மும்பையில் உள்ள கேட்டரிங் சர்வீசில் உணவு பரிமாறும் வேலை செய்து வந்ததாகவும் அதற்கு ஒரு நாளைக்கு தனக்கு ரூ.50 சம்பளம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். போலீஸ் கான்ஸ்டபிள் ஆன தந்தைக்கு நான் சினிமாவிற்கு வந்தது பிடிக்கவில்லை. சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால், குடும்பத்தின் எதிர்ப்பை தாண்டி சினிமாவில் கால் பதித்தார்.

விரக்தி: கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க ஆவலாக இருந்த ராக்கிக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. ஏனென்றால் அவர் நிறத்தால் புறக்கணிப்பட்டார். அவரை படத்தில் நடிக்க வைக்க யாரும் முன்வரவில்லை. இதனால் அவர் உடல் மற்றும் முக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார்.அக்னிசக்கரா படத்தின் மூலம் அறிமுகம் ஆன ராக்கிக்கு இன்று அவரது சொத்து மதிப்பு 40 கோடியை தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X