ரக்ஷா பந்தன் : தங்கைக்கு ராக்கி கட்டிய நயன்தாரா..சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் வீடியோ!

சென்னை : நயன்தாரா தனது தங்கை கையால் ராக்கி கட்டிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சகோதரர் மற்றும் சகோதரியின் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினம் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில், சகோதரன், சகோதரியின் கையில் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். சகோதரர் தன்னை பாதுகாப்பார் என்ற உறுதிமொழியையும் சகோதரி பெற்று கொள்வார்.

தங்கையின் அன்பு பாசம்

தங்கையின் அன்பு பாசம்

இந்த நல்ல நாளில் நயன்தாராவின் கையில் அவரது தங்கை ராக்கி கயிறு கட்டி ரிக்சா பந்தனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,நயன்தாராவும் தனது தங்கைக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை டாக்டர் ரினிதா ராஜன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, எப்போதும் வலிமையான மனிதர்களில் ஒருவராக இவருடன் நட்பையும் சகோதரத்துவத்தையும், பரஸ்பரம் மரியாதையும் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த ஜூன் மாதம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மணமக்களை வாழ்த்தினர்.

விரைவில் Netflixல்

விரைவில் Netflixல்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வுகள் முதல் சீசனாக விரைவில் Netflix தளத்தில் வெளியாக உள்ளன. அதற்கான புதிய ப்ரோமோ அண்மையில் வெளியானது. அதில், நான் வேலையை விரும்புகிறேன், உங்களை சுற்றி நிறைய அன்பு இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்வது உண்மையிலேயே மகிழ்ச்சியானது என்று கூறியிருந்தார். அந்த வீடியோவை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஸ்பெயின் அட்லீ

ஸ்பெயின் அட்லீ

அட்லி இயக்கத்தில் நயன்தாரா ஜவான் திரைப்பட வேலைகளில் பிஸியானார். திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருந்த நிலையில், தற்போது இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு 10 நாட்கள் தங்குவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X