Rashmika - திருமணம் நின்றால் என்ன? தொடர்பில்தான் இருக்கிறேன்.. ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் உருக்கம்
பெங்களூரு: ராஷ்மிகா மந்தனா இப்போது பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் ராஷ்மிகாவுக்கு ஹிந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் ரக்ஷித் ஷெட்டி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராஷ்மிகா குறித்து ரொம்பவே உருக்கமாக பேசியிருக்கிறார்.
கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கு சினிமா பலத்த வரவேற்பை கொடுத்தது. விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் அவரது நடிப்பும், அழகும் ரசிகர்களையும், திரைத்துறையினரையும் கவர அடுத்தடுத்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் அசுர வேகத்தில் வளர்ந்தார்.

புஷ்பா: தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு புஷ்பா திரைப்படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி மெகா ஹிட்டானதால் ராஷ்மிகா மந்தனாவுக்கு மேலும் புகழ் வெளிச்சம் கிடைத்தது. அதேபோல் அந்தப் படத்தில் அவர் ஆடிய நடனமும் பெரும் வரவேற்பை பெற்றது.
நேஷனல் கிரஷ்: புஷ்பா படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ் என்ற பெயரை பெற்றார். அவரது எக்ஸ்பிரஷென்கள் பயங்கர க்யூட்டாக இருக்கிறது என்று ரசிகர்கள் சிலாகிக்க ஆரம்பித்தனர். சூழல் இப்படி இருக்க தமிழில் சுல்தான் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. விஜய்யுடன் நடித்த வாரிசு படமும் தோல்வியை சந்தித்ததால் கோலிவுட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறார்.
அனிமல்: தமிழில் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டாலும் ஹிந்தியில் வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் அவர் கடைசியாக ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் நடித்திருக்கிறார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அந்தப் படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
கிளாமர் உச்சபட்சம்: இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கிளாமரில் உச்சம் சென்றிருக்கிறார். முத்த காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என அனைத்திலும் நடித்திருக்கிறார். இதற்காக அவர் 15 கோடி ரூபாய்வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாகவும் இரண்டு பேரும் வெளிநாட்டுக்கு அடிக்கடி பறப்பதாகவும் ஒரே வீட்டில் தங்குவதாகவும் கடந்த சில மாதங்களாகவே பேச்சு ஓடுகிறது.
காதல் கதை: ஆனால் அதுகுறித்து அவரோ, விஜய் தேவரகொண்டாவோ மௌனம் கலைக்காமல் இருக்கிறார்கள். இதற்கிடையே அவர் கன்னட சினிமாவில் அறிமுகமானபோது நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்தார். அவர்களது காதலுக்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் கொடுத்ததன் காரணமாக நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அது திருமணம்வரை செல்லவில்லை. அதற்கு ராஷ்மிகா மந்தனாதான் காரணம் என்றும்; திருமணம் செய்துகொண்டால் சினிமாவில் வளர முடியாது என்று அவர் முடிவெடுத்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.
ரக்ஷித் ஷெட்டி உருக்கம்: இந்நிலையில் ரக்ஷித் ஷெட்டி ராஷ்மிகா மந்தனா குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், "ராஷ்மிகா மந்தனாவுடனான எனது திருமணம் நின்றுவிட்டதுதான். இருந்தாலும் அவருடன் நான் இப்போதும் தொடர்பில்தான் இருக்கிறேன். அவருக்கு மிகப்பெரிய கனவு இருந்தது. அதனை அவர் அடைந்துவிட்டார். அவருக்கான அங்கீகாரத்தை கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











