புல்லட்டில் கெத்தா ரைடு போன ரச்சிதா மகாலட்சுமி..வியந்து பார்க்கும் ரசிகர்கள்!

சென்னை : சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி புல்லட்டில் தாறுமாறாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் டிரண்டடித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

மேலும் அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2வில் நடித்திருந்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார்.

ரச்சிதா மகாலட்சுமி

ரச்சிதா மகாலட்சுமி

பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சிதா பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் இவரது அழகாலும் திறமையான நடிப்பாலும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். கன்னடம், தெலுங்கு சீரியலில் நடித்து அனைவருக்கும் பரீச்சியம் ஆனார். நடிகை ரச்சிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இது சொல்ல மறந்த கதை

இது சொல்ல மறந்த கதை

இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஜீ தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற சீரியலில் இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும், இது சொல்ல மறந்த கதை சீரியலில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், விதவைப் பெண்ணாகவும் நடித்து வருகிறார்.

காலபோக்கில் சரியாகிவிடும்

காலபோக்கில் சரியாகிவிடும்

இதையடுத்து, ரச்சிதா தனது கணவர் தினேஷை விட்டு பிரிந்து விவாகரத்து செய்துவிட்டதாகவும் செய்திகள் பரவின. இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த ரச்சிதாவின் கணவர் தினேஷ், எனக்கும் ரச்சிதாவிற்கும் இடையே சில பிரச்சனை இருக்கு அது காலபோக்கில் சரியாகிவிடும். காலம் அனைத்தையும் மாற்றும் என்று நான் நம்புகிறேன். நானும் ரச்சிதாவும் இதுவரை சட்டப்படி பிரியவில்லை என்று கூறினார்.

அரைடவுசரில்

அரைடவுசரில்

இந்நிலையில், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, அரைடவுசர் போட்டுக்கொண்டு புல்லட் வண்டியில் கெத்தாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வரும் நிலையில், புல்லட்டை ஸ்டைலாக ஓட்டி கம்மான் பேபி பாடிய பாடலை ரீலாக போட்டுள்ளார் இந்த வீடியோவிற்கு ஏராளமானோர் தங்களது இதயத்தை பரிசாக அளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X