Rakul Preet Singh: காதலனை கரம் பிடித்த ரகுல் ப்ரீத் சிங்... கோவாவில் களைகட்டிய கொண்டாட்டம்!
கோவா: அயலான் பட நாயகி ரகுல் ப்ரீத் சிங் தனது காதலனை இன்று கரம் பிடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதலித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே தங்களது திருமணம் பற்றி அறிவித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் தற்போது கோவாவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
காதலனை கரம் பிடித்த ரகுல் ப்ரீத் சிங்
கன்னடத்தில் வெளியான கில்லி திரைப்படம் மூலம் 2009ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்த அவர், தமிழில் தடையற தாக்க மூலம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து என்னமோ ஏதோ, தீரன் அதிகாராம் ஒன்று, தேவ், NGK ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங். மேலும் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, இந்தியன் 3 படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று தனது காதலனை கரம் பிடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியும் ரகுல் ப்ரீத் சிங்கும் காதலித்து வந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் அனிமல் படத்தின் பாடல்களுக்கு ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி இருவரும் ஜோடியாக ஆட்டம் போட்டு வைப் கொடுத்தனர்.
ஏற்கனவே திட்டமிட்டபடி பசுமை வழியில் நடந்த இந்த திருமணத்தில் பட்டாசு, ஒலிப்பெருக்கி ஆகியவைகள் பயன்படுத்தப்படவில்லையாம். அதேபோல், சீக்கிய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு 'To the Anand Karaj Of' என பெயர் வைத்துள்ள ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி ஜோடி. முன்னதாக தங்களது திருமணத்தை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கோவாவில் மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
சங்கீத் நிகழ்ச்சியின் போதே மணமக்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, இருவருக்கும் திருமண வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதன்பின்னரே ரகுல் ப்ரீத் சிங்கும் ஜாக்கி பக்னானியும் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இப்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











