கணவருடன் கன்னா பின்னாவென யோகா செய்யும் இந்தியன் 2 நடிகை.. குவியும் மோசமான கமெண்ட்ஸ்!

சென்னை: இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் தனது கணவர் ஜாக் பக்னானியுடன் யோகா செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, தேவ் மற்றும் இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் உள்ளிட்ட பல படங்களில் ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். அடுத்த மாதம் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த் நடித்துள்ள இந்தியன் 2 படத்திலும் சித்தார்த்துக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.

Rakul Preet Singh Yoga Samyuktha Hegde Heroine Indian 2 2

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பாலிவுட் தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகுல் பிரீத் சிங் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது கணவருடன் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில், படுமோசமான டபுள் மீனிங் கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சர்வதேச யோகா தினம்: உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகா தினம் வந்து விட்டாலே சின்ராசை கையில் பிடிக்க முடியாது என்பது போல நடிகைகள் தொடர்ந்து ஏகப்பட்ட கவர்ச்சி யோகா போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். மலைகா அரோரா, ஷிவதா, பூஜா ராமசந்திரன், அதுல்யா ரவி என பலர் யோகா செய்யும் பதிவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Rakul Preet Singh Yoga Samyuktha Hegde Heroine Indian 2 2

கணவருடன் கன்னா பின்னா போஸ்: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்த ஆண்டு ஜாக் பக்னானியை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவருடன் இணைந்து கன்னா பின்னாவென யோகா செய்யும் தாறுமாறு புகைப்படங்களை தற்போது வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். யோகா பிரியையான ரகுல் ப்ரீத் சிங் கணவரையும் டார்ச்சர் செய்ய ஆரம்பித்து விட்டாரா என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

மோசமான கமெண்ட்ஸ்: புதுசா கல்யாணம் ஆனால் லைட் ஆஃப் பண்ணிட்டு இதையெல்லாம் பண்ணுங்க பாஸ் என்றும் பொசிஷன் எல்லாம் ரொம்பவே மோசமாக இருக்கு என்றும் படுமோசமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். திருமணத்துக்குப் பிறகும் நல்லா ஸ்ட்ரெச் பண்றீங்க சூப்பர் ரகுல் என அவரது ரசிகர்கள் லைக்குகளையும் ஃபயர் எமோஜிக்களையும் போட்டு வருகின்றனர்.

இந்தியன் 2: இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்த அயலான் திரைப்படம் பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு வெளியாகி ஓடவில்லை. இந்தியன் 2 படமும் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த படம் எப்படி இருக்கப் போகிறதோ? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்தியன் 2 மிகப்பெரிய கம்பேக் படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண் நண்பருடன் சம்யுக்தா ஹெக்டே: ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக் பக்னானியே பரவாயில்லை என சொல்லும் அளவுக்கு கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே ஆண் நண்பருடன் கண்டபடி யோகா செய்யும் வீடியோக்களையே வெளியிட்டு ஷாக்கை கிளப்பி உள்ளார். பப்பி, கோமாளி, மன்மத லீலை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுல்யா ரவி தாஜ்மகால் அருகே சென்று யோகா செய்துள்ள வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X