பச்சை கலரு சிங்கிச்சான்.. மோனோகினியில் மிரட்டும் ரகுல் ப்ரீத் சிங்.. பிரச்சனை எல்லாம் ஓவர் போல!
சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் மோனோகினி புகைப்படம் ரசிகர்களுக்கு கவர்ச்சி தீனியாக அமைந்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு செம தாராளம் காட்டி ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள ஹாட் மோனோகினி புகைப்படம் வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.
காஜல் அகர்வால் தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ள நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கும் மாலத்தீவில் ஹாலிடேவை கழித்து வருகிறார்.

பிகினி பேபி
கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனை ஆரம்பிக்காத நிலையில், இந்த ஆண்டு நியூ இயர் விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங் ப்ளூ கலர் பிகினியில் செம்ம செக்ஸியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இன்ஸ்டாகிராமை கதிகலங்க வைத்தார். தொடர்ந்து ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களையும் லாக்டவுன் நேரத்தில் களமிறக்கினார்.

யோகா பிரியை
தனது உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் தென்னிந்திய நடிகைகளில் ரகுல் ப்ரீத் சிங் முக்கியமான நடிகை. அடிக்கடி தனது ஜிம் ஒர்க்கவுட் வீடியோக்களையும் யோகா செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வந்தார்.

லாக்டவுனிலும் ஷூட்டிங்
கொரோனா லாக்டவுன் நேரத்திலும் தனது டீம் உடன் உச்சகட்ட பாதுகாப்பில் ஷூட்டிங் செய்த ரகுல் ப்ரீத் சிங் அந்த போட்டோக்களை ஷேர் செய்து வைரலாக்கினார். மேலும், தேவையில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம், பாதுகாப்புடன் இருங்க என ரசிகர்களுக்கு அறிவுரையும் கூறி இருந்தார்.

போதைப் பொருள் சர்ச்சை
இந்தியன் 2, அயலான் என தமிழில் இரண்டு படங்களில் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு, சமீபத்தில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து எழுந்த வழக்கின் காரணமாக, போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக விசாரணைகள் நடந்தன.

ரிலாக்ஸ் பண்ண
எல்லா பிரச்சனைகளையும் மறந்து விட்டு ஜாலியா ரிலாக்ஸ் பண்ண, தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத். அங்கே பச்சை நிற மோனோகினியில் பீச் ரெசார்ட்டில் ஹாலிடே மூடில் இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், தனது புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாவில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

கடலை நுகருங்கள்.. வானத்தை உணருங்கள்
நடிகை ரகுல் ப்ரீத் சிங், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அதற்கு கேப்ஷனாக, கடலை நுகருங்கள்.. வானத்தை உணருங்கள்.. உங்கள் ஆன்மாவை பறக்க விடுங்கள் என திடீரென அமலா பால் போல கேப்ஷன் கொடுக்க ஆரம்பித்து விட்டார். ஒரு மணி நேரத்தில் 3 லட்சம் லைக்குகளை தாண்டி போட்டோ தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











