கோல்டன் க்ரீம் உடை.. வைர நெக்லஸ்.. மணமகளாக ரகுல் ப்ரீத் சிங் எப்படி ஜொலிக்கிறாரு பாருங்க.. செம!
கோவா: வெளிநாட்டில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த திட்டமிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங் கோவாவிலேயே பசுமை திருமணத்தை செய்துக் கொண்டுள்ளார். இன்று நடைபெற்ற திருமண புகைப்படங்கள் இணையத்தில் கூட லீக்காகாத நிலையில், அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அயலான் ஹீரோயின் வெளியிட்டுள்ளார்.
திரிஷா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான மோகினி படத்தில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் தனது காதலை அறிவித்து திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இந்நிலையில், கோவாவில் இன்று கோலாகலமாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி திருமணம் நடைபெற்ற நிலையில், திருமண புகைப்படங்களை ரகுல் ப்ரீத் சிங் தற்போது வெளியிட்டுள்ளார்.
கோல்டன் க்ரீம் திருமண உடை: கடைசியாக கோவாவில் நாகினி நடிகை மெளனி ராய் திருமணம் நடைபெற்றது. தற்போது அதே போல அந்தி சாயும் வேளையில் பீச் ரெசார்ட்டில் நண்பர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்ற திருமண விழாவில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கழுத்தில் தாலி கட்டி ஜாக்கி பக்னானி அக்னி சாட்சியாக திருமணம் செய்துக் கொண்டார். கோல்டன் க்ரீம் நிற உடையில் மணமக்கள் இருவரும் மணமேடையை அலங்கரித்த புகைப்படங்கள் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன.

கழுத்தில் பெரிய வைர நெக்லஸ்: ரகுல் ப்ரீத் சிங் அணிந்துள்ள திருமண உடையின் விலையே 2 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தளவுக்கு ஏகப்பட்ட வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், அவர் கழுத்தில் அணிந்துள்ள வைர நெக்லஸ் பல கோடி ரூபாய் மதிப்புடையது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அழகான மேக்கப்பில் அயலான் நடிகை தனது கணவர் கரத்தை பற்றிக் கொண்ட காட்சிகள் தற்போது டிரெண்டாகி வருகின்றன.

ஆனந்தத்தில் அயலான் நடிகை: கணவரது கரத்தை பிடித்துக் கொண்டு எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு என ரகுல் ப்ரீத் சிங் 32 பல்லும் தெரியும் அளவுக்கு சிரிக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. அடுத்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தியன் 2 படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள நிலையில், இந்த ஆண்டு கோலிவுட் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடுவார் ரகுல் ப்ரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் பல லட்சம் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் ரகுல் ப்ரீத் சிங்கை வாழ்த்தி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











