மது வாங்கினாரா ரகுல் ப்ரீத் சிங்.. வைரலாகும் வீடியோ.. அதுக்கு அவர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

ஹைதராபாத்: நாடு முழுவதும் ஒயின்ஷாப் கடைகள் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மது வாங்கி செல்வதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Recommended Video

மது வாங்கினாரா ரகுல் ப்ரீத் சிங்.. வைரலாகும் வீடியோ

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் கெளதம் கார்த்திக் படங்களில் நடித்துள்ளார்.

குடிகாரர்கள் கொண்டாட்டம்

குடிகாரர்கள் கொண்டாட்டம்

நாடு முழுவதும் லாக்டவுன் தளர்த்தப்படா விட்டாலும், குடிகாரர்கள் கொண்டாட ஒயின்ஷாப்களை சில மாநில அரசுகள் திறந்து இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டு குடிமகன்களின் அட்டகாசங்கள் மீம்களாகவும், சமூக இடைவெளிக்கு வேட்டு வைத்த வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

மது வாங்கினாரா

மது வாங்கினாரா

இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி, வீட்டை விட்டு வெளியே வந்து கையில் எதையோ வாங்கிக் கொண்டு செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நெட்டிசன்கள் உடனடியாக ரகுல் ப்ரீத் சிங் மது வாங்கி செல்கிறார் பாருங்க என கமெண்ட் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

தெரியாம போச்சே

தெரியாம போச்சே

இந்நிலையில், அந்த வைரல் வீடியோவை பார்த்து சிரித்த ரகுல் ப்ரீத் சிங், நக்கலாக, அய்யய்யோ தெரியாமல் போச்சே.. அந்த மருந்து கடையில் ஆல்கஹால் கூடவா விற்கின்றனர் என தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஸ்மைலி சிம்பிளையும் போட்டு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

மாட்டிக்கிட்டீங்க

மாட்டிக்கிட்டீங்க

ஆனாலும், சில நெட்டிசன்கள் ரகுல் ப்ரீத் சிங் சொல்வதை நம்பாமல், அதெல்லாம் இல்லை சரக்கு வாங்கிட்டுத் தான் போயிருக்கீங்க, வீடியோவில் வசமா மாட்டிக்கிட்டீங்க என பதிலுக்கு கமெண்ட் செய்து கிண்டல் செய்து வருகின்றனர். மற்றும் சிலர், அவங்க ஆல்கஹால் சானிடைசரை சொல்றாங்க என்றும் கமெண்ட் செய்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.

200 குடும்பங்களுக்கு

200 குடும்பங்களுக்கு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு பிரணிதா உள்ளிட்ட பல நடிகைகள் உதவி செய்து வருகின்றனர். நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது இல்லத்திற்கு அருகே இருக்கும் 200 ஏழை குடும்பங்களுக்கு இந்த லாக்டவுன் முடியும் வரை உணவளித்து வருவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வரிசைக்கட்டி

வரிசைக்கட்டி

தமிழில் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் என இரு படங்களில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். அதுமட்டுமின்றி பாலிவுட்டில் அட்டாக், சலே சலோ, தேங்க் காட் உள்ளிட்ட பல படங்களிலும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகி உள்ளார். வொர்க்கவுட் ஃப்ரீக்கான ரகுல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X