ரகுல் ப்ரீத் சிங் ஹனிமூன் போக இப்படியொரு சிக்கலா?.. அந்த விஷயம் நடந்ததுக்கு அப்புறம் தானாம்!

மும்பை: வெளிநாட்டில் திருமணத்தை நடத்த ரகுல் ப்ரீத் சிங் ஆசைப்பட்ட நிலையில், மோடியின் கோரிக்கையை ஏற்று ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் ஜாக்கி பக்னானி கோவாவிலேயே பசுமைவழி திருமணத்தை நடத்தியிருக்கிறார். இந்நிலையில், ஹனிமூனுக்காவது உடனடியாக வெளிநாட்டுக்கு போகலாம் என கனவு கண்டு கொண்டிருந்த ரகுல் ப்ரீத் சிங்குக்கு அதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அக்‌ஷய் குமாரை வைத்து தொடர்ந்து வரிசையாக பல படங்களை தயாரித்து வரும் செம தைரியமான தயாரிப்பாளர் தான் ஜாக் பக்னானி. பாலிவுட்டில் வெயிட் பார்ட்டியான அவரை காதலித்து வந்த ரகுல் ப்ரீத் சிங் கோவாவில் கோலாகலமாக நேற்று முன் தினம் திருமணம் செய்துக் கொண்டார்.

Rakul Preet Singh honeymoon postponed for this reason only

பான் இந்தியா நடிகை: கன்னடத்தில் 2009ல் வெளியான கில்லி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். 33 வயதாகும் ரகுல் ப்ரீத் சிங் தமிழில் கார்த்தி உடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களிலும் சூர்யாவுடன் என்ஜிகே, சிவகார்த்திகேயன் உடன் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Rakul Preet Singh honeymoon postponed for this reason only

33 வயதில் திருமணம்: முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கும் போதே திடீரென 33 வயதிலேயே தனது காதலர் ஜாக் பக்னானியை கரம் பிடித்து விட்டார் ரகுல் ப்ரீத் சிங். கோவாவில் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் சமீபத்தில் அரங்கேறியது. திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரகுல் ப்ரீத் சிங் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

Rakul Preet Singh honeymoon postponed for this reason only

ஹனிமூன் எப்போ: திருமணமான கையோடு வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்ல கிளம்பிவிடுவார் ரகுல் ப்ரீத் சிங் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போதைக்கு ஹனிமூன் பிளான் இல்லை என ஜாக் பக்னானி முடிவு செய்து விட்டதாக கூறுகின்றனர். அதற்கு காரணம் அவரது தயாரிப்பில் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் நடித்து வரும் படே மியான் சோட்டே மியான் படத்தின் ரிலீஸுக்கு பிறகே ஹனிமூன் என்கிற முடிவை எடுத்துள்ளார்களாம்.

Rakul Preet Singh honeymoon postponed for this reason only

ராட்சசன் படத்தில் ஏற்பட்ட காதல்: அக்‌ஷய் குமாரின் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் ஜாக் பக்னானி தயாரிப்பில் அக்‌ஷய் குமார் நடித்த ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக்கான கட்புட்லி படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். ஆனால், கடைசியில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஜாக் பக்னானியின் ஜோடியாகவே அவர் மாறிவிட்டார். படே மியான் சோட்டே மியான் திரைப்படம் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகிறது. அதன் பின்னர் தான் இருவரும் ஹனிமூன் செல்லப் போவதாக ஜாக்கி பக்னானியின் உறவினர் வாசு பக்னானி தெரிவித்து இருக்கிறார்.

ரகுல் கொஞ்சம் அப்செட் தானாம்: கணவரின் இந்த முடிவை ஏற்றுக் கொண்டாலும், உடனடியாக ஹனிமூன் போக முடியவில்லையே என்றும் அந்த படம் வெளியாக இன்னும் ஒன்றரை மாதம் இருக்கே என ரகுல் ப்ரீத் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் சற்றே அப்செட் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X