ட்ரான்ஸ்பரண்ட் உடையில் ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட வெதுவெதுப்பான ஹாட் க்ளிக்.. செம்ம வைரல்!
சென்னை : நடிகை ரகுல் பிரீத் சிங் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வரும் திரைப்படம் அயலான்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்
இந்திய அளவில் பல மொழிகளில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரகுல் பிரீத் சிங் இப்பொழுது ட்ரான்ஸ்பரன்ட் உடையில் வெதுவெதுப்பான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள ஹாட் க்ளிக் இணையதளத்தில் வைரலாகிறது.

ஹாலிவுட் தரத்திற்கு
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வர சயின்டிஃபிக் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது கிட்டத்தட்ட ஹாலிவுட் படம் போல அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் பிரீத் சிங் முதல் முறையாக இந்த படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர்

இந்தியன் 2 படப்பிடிப்பு
தமிழ் சினிமாவில் மெகாஹிட் கூட்டணியான சங்கர் மற்றும் கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் இந்தியன் 2. பிரம்மாண்ட பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களிலேயே பல்வேறு பிரச்சினைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார்.

பிரம்மாண்ட பொருட்செலவில்
இதுவரை நடித்த படங்களில் இருந்து மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங் இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. லைக்கா நிறுவனத்திற்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட சிறு பூசல் இப்பொழுது சமாதானமாகி மிக விரைவிலேயே இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்க உள்ளது
Recommended Video

வெதுவெதுப்பான கவர்ச்சியில்
தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழில் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற தமிழிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். கவர்ச்சி நடிப்பு நடனம் என அனைத்திலும் கைதேர்ந்த ரகுல் பிரீத் சிங் இப்பொழுது ட்ரான்ஸ்பரன்ட் உடையில் வெதுவெதுப்பான கவர்ச்சியில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹாட் க்ளிக் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











