நீங்க பாக்க ஏலியன் மாதிரியே இருக்கீங்க... முன்னணி நடிகையை வரிசைகட்டி கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.

இப்பொழுது சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வந்த இந்தியன் 2ல் ஒப்பந்தமாகி இருந்த நடிகை ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஏலியன் என வரிசைகட்டி கலாய்த்து வருகின்றனர்.

தொடர்ந்து வாய்ப்புகள்

தொடர்ந்து வாய்ப்புகள்

தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழில் தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து இவர் நடித்த புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்கள் வெளிவந்தன. அதன் பிறகு தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வர தமிழில் நீண்டகாலமாக நடிக்காமல் இருந்தார்.

கார்த்திக்கு ஜோடியாக

கார்த்திக்கு ஜோடியாக

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியான ஸ்பைடர் மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தவர். இப்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்த தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ் உள்ளிட்ட படங்கள் இவரை ரசிகர்களிடையே கொண்டாட வைத்தது.

ரிலீசுக்காக காத்திருக்கிறார்

ரிலீசுக்காக காத்திருக்கிறார்

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் ரகுல் பிரீத் சிங் இருக்க பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2ல் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் இந்தப் படம் சில பல பிரச்சனைகளால் இன்று வரை தொடங்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

Recommended Video

Celebrities Airport Videos | Celebrities Spotted | Tamil Filmibeat
தம்மாத்தூண்டு உடையில்

தம்மாத்தூண்டு உடையில்

இதேபோல ஹிந்தியிலும் கை நிறைய படங்களில் நடித்து வரும் இவர் விதவிதமான போட்டோஷூட்களிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல பிராண்ட் ஒன்றிற்கு நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தம்மாத்தூண்டு உடையில் பார்க்கவே வித்தியாசமான லுக்கில் இருக்கும் ரகுல் பிரீத் சிங்கைப் பார்த்த நெட்டிசன்கள் ஏலியன் மாதிரி இருக்கீங்க என இடைவிடாமல் வரிசைகட்டி கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X