பின்னாடி என்னம்மா பேலன்ஸ் பண்றாங்க.. வேற லெவல் ஸ்குவாட் போடும் ரகுல் ப்ரீத் சிங்.. வைரல் வீடியோ!
சென்னை: சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங், மீண்டும் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்ய ஆரம்பித்துள்ளார்.
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து பிசியாக இருந்து வரும் நடிகை என்றால் அது ரகுல் ப்ரீத் சிங் தான்.
கடந்த ஆண்டு பாலிவுட்டை உலுக்கிய போதைப் பொருள் விவகாரத்தில் இவரது பெயரும் அடிபட்டு பரபரப்பை கிளப்பியது.

வழக்கு தொடர்ந்தார்
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண விசாரணையை தொடர்ந்து பாலிவுட்டில் வெடித்த போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோருடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரும் அடிபட்டது. தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றும், தனது பெயரை பயன்படுத்தும் மீடியாக்கள் மீது வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்தார் ரகுல் ப்ரீத் சிங்.

மாலத்தீவு ஹாலிடே
போதைப் பொருள் விவகாரம் அடங்கிய நிலையில், மாலத்தீவுக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அங்கே வித விதமாக பிகினி உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி கன்னியாக மாறி இவர் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் ஏகப்பட்ட இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது.

கொரோனா பாதிப்பு
தொடர்ந்து ஷூட்டிங்கில் ஈடுபட்டு வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா டெஸ்ட் பாசிட்டிவ் ஆனது என்கிற செய்தியை அறிவித்த ரகுல் ப்ரீத் சிங் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சைகளை மேற்கொண்டார். டிசம்பர் இறுதியில் கொரோனா நெகட்டிவ் ஆகிடுச்சுன்னும் ஹேப்பியாக போஸ்ட் செய்தார்.
அயலான் ஷூட்டிங்
அயலான் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து தனது ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஏலியன் கதைக் கருவில் உருவாகி வரும் அந்த படத்தை காண நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
வெறித்தனமான ஸ்குவாட்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் யோகா மற்றும் வொர்க்கவுட் செய்வதில் மிகுந்த ஆர்வமுடையவர் என்பது அனைவரும் ஒன்று தான். ஏகப்பட்ட வொர்க்கவுட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, பின்னாடி செம பேலன்ஸ் செய்து ஸ்குவாட் போடும் வீடியோவை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
அப்ஸ் அண்ட் டவுன்ஸ்
வாழ்க்கைன்னா அப்ஸ் அண்ட் டவுன்ஸ் இருக்கும் ஆனால், அதை நான் ஸ்குவாட்டுனு தான் கூப்பிடுவேன் என தத்துவமாக பேசி போட்டுள்ள கேப்ஷனும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி உள்ளன. விரைவில் ஏகப்பட்ட திரைபடங்களை வரிசை கட்டி பல்வேறு மொழிகளில் கொடுக்க காத்துக் கொண்டு இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.


Click it and Unblock the Notifications











