உங்க அம்மா அப்படி பண்ணியிருப்பா.. ட்ரோல் செய்த நெட்டிசனை இப்படித் தான் திட்டினேன் – ரகுல் ப்ரீத்!
சென்னை: கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என சுழன்று சுழன்று நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், எல்லை மீறும் ட்ரோல்கள் குறித்து காட்டமான பதில் அளித்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் 2012ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் மற்றும் என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

ரொம்ப ஆக்டிவ்
சமூக வலைதளங்களில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ரொம்ப ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 13 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். ரகுல் ப்ரீத் சிங் அடிக்கடி கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

ஆபாசமான கமெண்ட்ஸ்
பொதுவாக நடிகைகள், கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டாலே, அதனை கழுவி ஊற்றி ட்ரோல் செய்யவதையே நிறைய நெட்டிசன்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மேலும், சிலர் மிகவும் மோசமாகவும், ஆபாசமாகவும், தனி நபர் தாக்குதலாகவும் கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர்.

கஷ்டமா இருக்கு
சினிமா நடிகைகள் தானே என்ன செஞ்சிடப் போறாங்கன்னு ரொம்ப ஆபாசமா சிலர் செய்யும் கீழ்த்தரமான கமெண்ட்டுகள் மனதளவில் தன்னை மிகவும் பாதிப்பதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார். மேலும், பெண்களை போதைப் பொருளாகவே இந்த சமூகம் பார்க்கும் பார்வை மாற வேண்டும் என்றார்.

வரம்பு மீறிய
ஒரு முறை ஒரு நெட்டிசன், என்ன வெறும் சட்டையோடு போஸ் கொடுத்திருக்கீங்க, கீழ ஒண்ணும் போடலையா என்றும், காருக்குள் உல்லாசமாக இருந்துவிட்டு, அப்படியே வெளியே வந்துட்டீங்களா என்றும் வரம்பு மீறிய கமெண்ட் ஒன்றை பதிவிட்டு இருந்தான். எனக்கு ரொம்ப கோபமாகிடுச்சு பதிலுக்கு வச்சி விளாசிட்டேன்.

உங்க அம்மா அப்படி பண்ணியிருப்பா
எல்லை மீறிய கோபத்தால், உங்க அம்மா தான் அப்படி பண்ணியிருப்பா, அதனால், தான் அதையே நினைத்துக் கொண்டு நீ கமெண்ட் செஞ்சிருக்க என்று தானும் உணர்சி வசப்பட்டு திட்டியதையும் ரகுல் தெரிவித்தார். இதுபோன்ற கமெண்ட் செய்பவர்கள், பெரும்பாலும் ஃபேக் ஐடிக்களகாவே இருக்கின்றனர்.

கோழைகள்
தங்களது நிஜ முகத்தை காட்ட தைரியம் இல்லாத கோழைகள் தான் இதுபோன்ற ஆபாசமான கமெண்ட்டுகளை நடிகைகளின் சமூக வலை தள பக்கங்களில் மிகவும் தைரியமாக பதிவிடுகின்றனர். சரியான அடையாளம் இல்லாதவர்களுக்கு, சோஷியல் மீடியாவில் கணக்குகள் உருவாக்க முடியாத அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்தால் மட்டுமே இதுபோன்ற எல்லை மீறல்கள் கட்டுப்படுத்த முடியும் என்றும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரகுல் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











