Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நாக்கு தள்ளிடுச்சு.. வெயிலில் இஷ்டத்துக்கு விளையாடினா இப்படித்தான்.. வைரலாகும் ரகுல் செல்ஃபி!
சென்னை: லாக்டவுன் காரணமாக கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் வீட்டிலேயே அகப்பட்டு கிடந்த ரகுல் ப்ரீத் சிங், லாக்டவுன் தளர்வு காரணமாக கோல்ஃப் விளையாடி உள்ளார்.
ஹைதராபாத்தில் கோல்ஃப் மைதானங்கள் திறக்க எல்லாம் அனுமதி கொடுத்துட்டாங்க போல..
கோல்ஃப் விளையாடிய வீடியோக்களையும், அதன் பின்னர் நாக்கு தள்ளிய செல்ஃபியையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
இப்போது வைரலாகும், 6 வருடத்துக்கு முன் கொடுத்த லிப் லாக் முத்தம்.. பிரபல ஹீரோயின் வருத்தம்..!
பான் இந்திய நடிகை
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியளவில் பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கெளதம் கார்த்திக்கின் என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், சூர்யாவின் என்.ஜி.கே., மற்றும் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
டாப்ஸி கிண்டல்
சமீபத்தில், ஜிம்முக்கு போக முடியவில்லை என்றாலும், வீட்டிலேயே தொடர்ந்து ஒர்க்கவுட் செய்து, வெறித்தனமாக வியர்வை வழிய செம செக்ஸியான புகைப்படத்தை நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த போட்டோவை பார்த்த நடிகை டாப்ஸி, நான் உன்னை பிளாக் பண்ண போறேன் என கிண்டலாக கமெண்ட் செய்து இருந்தார்.
லாக்டவுனுக்கு முன்னதாக
லாக்டவுனுக்கு முன்பு வரை இஷ்டத்துக்கு ஊர் சுற்றி பிகினி புகைப்படங்களாக பதிவிட்டு வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், கடந்த 3 மாதங்களாக ஊர் சுற்ற முடியாமல், வீட்டிலேயே அடைந்து கிடந்தார். அவ்வப்போது, வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வேறு பக்கம் செல்ல விடாமல் தன் வசப்படுத்தியும் வைத்திருக்கிறார்.
கோல்ஃப் விளையாட்டு
இந்நிலையில், தற்போது கோல்ஃப் மைதானத்தில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக கோல்ஃப் விளையாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். லாக்டவுன் போரிங்கால் போர் அடித்துப் போன வாழ்க்கையை ரெஃப்ரெஷ் பண்ண கோல்ஃப் விளையாட்டு உதவியதாகவும் கூறியுள்ளார்.
நாக்கு தள்ளிடுச்சு
5 மணி நேரத்துக்கும் மேலாக அடிக்கிற வெயிலில் கோல்ஃப் விளையாடிய பின்னர், தனது காரில் அமர்ந்தபடி நாக்கை வெளியே நீட்டியபடி ரொம்ப சோர்வாக இருக்கும் செல்ஃபியை எடுத்து பதிவிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இந்தியன் 2 உருவாகி வருவது குறிப்பிடத்தகக்து. அவர் கைவசம் மேலும், சில பெரிய படங்களும் உள்ளன.