ஒரே நேரத்தில் எப்படிமா?: ரகுல் ப்ரீத் சிங்கை படத்தில் இருந்து நீக்கிய இயக்குநர்

By Siva

Recommended Video

வெங்கி மாமா படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பதில் வேறு ஒரு நடிகை ஒப்பந்தம்- வீடியோ

ஹைதராபாத்: நாக சைதன்யாவின் வெங்கி மாமா படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பதில் வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கோலிவுட் மட்டும் இன்றி டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக உள்ளவர் ரகுல் ப்ரீத் சிங். அவர் கார்த்தியுடன் சேர்ந்து நடித்த தேவ் படம் அண்மையில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை.

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு மேலும் ஒரு கவலை அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.

நாக சைதன்யா

நாக சைதன்யா

நாக சைதன்யா நடிக்கும் வெங்கி மாமா தெலுங்கு படத்தின் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங்கை ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டது. அந்த படத்தில் வெங்கடேஷும் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் இருந்து ரகுல் நீக்கப்பட்டுள்ளார்.

ரகுல் ப்ரீத்

ரகுல் ப்ரீத்

வெங்கி மாமா படத்தில் ஒப்பந்தமான கையோடு ரகுல் ப்ரீத் சிங் மன்மதுடு 2 படத்தில் நாகர்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த படத்திலும் நாக சைதன்யா நடிக்கிறார். ஒரே நேரத்தில் அப்பா நாகர்ஜுனா, மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ரகுல் நடித்தால் ரசிகர்கள் முகம் சுளிப்பார்கள் என்று வெங்கி மாமா படக்குழுவினர் நினைத்தனர். மேலும் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

புது நடிகை

புது நடிகை

மகனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்ட கையோடு அப்பாவுடன் ஜோடி சேர்ந்ததால் ரகுலை வெங்கி மாமா படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். அவருக்கு பதிலாக நபா நடேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

தெலுங்கு

தெலுங்கு

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ராட்சசன் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கை தேர்வு செய்தார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை தற்போது அவருக்கு பதில் ராஷி கன்னாவை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.

ஹீரோயின்

ஹீரோயின்

ரகுல் ப்ரீத் சிங் ஒரு புதுப்படத்தில் ஒப்பந்தமாவதும் அதன் பிறகு அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைப்பதும் தெலுங்கு திரையுலகில் அடிக்கடி நடக்கிறது. ரகுலுக்கு நேரம் சரியில்லை என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X