கூட நடிச்சப்போ புரொபோஸ் செய்தார்.. பிரபல நடிகரின் மானத்தை வாங்கிய ரகுல் பிரீத் சிங்!
நடிகை ரகுல் பிரீத் சிங்கை நடிகர் ஒருவர் புரொபோஸ் செய்த தகவல் தெரியவந்துள்ளது.
Recommended Video
சென்னை: தன்னுடன் நடிகர் ஒருவர் தன்னை புரொபோஸ் செய்ததாக நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் கலக்கி வருகிறார் நடிகை ரகுல் பிரீத் சிங். அனைத்து மொழிகளிலும் கை நிறைய படங்கள் வைத்துள்ளார் அவர்.
இந்தியில் ரகுல் பிரீத் சிங் நடித்துள்ள மர்ஜாவான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அவர் செம குஷியில் இருக்கிறார்.

காதல் புரொபோஸல்
இந்நிலையில் ரகுல் ஆங்கில இணைய ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதில் தன்னுடன் நடித்த நடிகர் ஒருவர் தனக்கு காதல் புரொபோஸ் செய்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் தனக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் மறுத்துவிட்டதாக ரகுல் தெரிவித்துள்ளார்.

யார் அந்த நடிகர்
தனக்கு புரொபோஸ் செய்த நடிகர் யார் என்பது குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை. எனவே ரகுலை புரொபோஸ் செய்த அந்த நடிகர் யார் என்பது குறித்த யூகங்களும், விவாததும் சமூக வலைதளங்களை விறுவிறுப்பாக்கியுள்ளது.

நெட்டிசன்களின் கணக்கு
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ரகுல் நடித்துள்ளார். எனவே இவர்களில் திருமணமாகாத, ப்ளே பாய் ஹீரோக்கள் யார், யார் இருக்கிறார்கள் என கணக்கு போட்டு, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். இதனால் அந்த நடிகரின் மானம் கப்பலேறும் நிலைக்கு சென்றுள்ளது.

இந்தியன் 2ல் ரகுல்
ரகுல் பிரீத் சிங் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் சித்தார்த்துக்கு ஜோடியாக, சமூக போராளி வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











