ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இந்த சோகத்திலும் ஒரு சந்தோஷம்
ஹைதராபாத்: இரண்டு பட வாய்ப்புகள் கை நழுவிப் போன சோகத்தில் இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் சந்தோஷப்படும்படியும் ஒரு விஷயம் நடந்துள்ளது.
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் இரண்டு பட வாய்ப்புகளை நழுவவிட்டுள்ளார். நாக சைதன்யாவின் வெங்கி மாமா படத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரகுல்.
பின்னர் ராட்சசன் தெலுங்கு ரீமேக் வாய்ப்பையும் தவறவிட்டார்.

நேரம்
அடுத்தடுத்து இரண்டு பட வாய்ப்புகளை இழந்த ரகுல் ப்ரீத் சிங்கிற்கு நேரம் சரியில்லை என்ற பேச்சு கிளம்பியுள்ளது. இந்நிலையில் தான் அவர் வீட்டில் இருந்து தெலுங்கு திரையுலகில் ஒருவர் அறிமுகமாகிறார்.

ஹீரோ
ரகுல் ப்ரீத் சிங்கின் தம்பி அமன் தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார். தாசரி லாரன்ஸ் எழுதி, இயக்கும் இந்த படத்தில் அமனுக்கு ஜோடியாக புதுமுகம் மோனிகா சர்மா நடிக்க உள்ளார். இந்த படத்தை ரஜினி பிலிம் கார்பரேஷன் தயாரிக்கிறது. பிற நடிகர்கள், நடிகைகள் பற்றிய விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

சினிமா
அமன் தெலுங்கு திரையுலகில் தற்போது தான் அறிமுகமாகிறார். ஆனால் அவர் ஏற்கனவே செடிஷன் என்ற படத்தில் சி.ஐ.ஏ. ஏஜெண்டாக நடித்துள்ளார். இந்த ஆண்டு ரிலீஸாகும் செடிஷன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.

ரகுல் ப்ரீத் சிங்
எப்பொழுதும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரகுல் ப்ரீத் சிங் ஜிம் பிசினஸ் செய்து வருகிறார். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து நடிகை தொழில் துவங்குவது ஒன்றும் புதிது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











